For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து.. சேவாக்கை வம்புக்கு இழுத்து சர்ச்சை

Recommended Video

World Cup 2019 - உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து

லண்டன்: உலக கோப்பை சாம்பியனான பிறகு, இங்கிலாந்து டிவி பிரபலம் பியர்ஸ் மோர்கன் சேவாக்கின் பழைய ட்வீட்டை தேடி எடுத்து, பதிலளித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு பியர்ஸ் மோர்கன் ட்விட்டர் பெரும் விவாத பொருளானது. அந்த டுவிட்டரில் அவர் கூறியிருந்ததாவது: 1.2 பில்லியன் மக்கள்தொகை உடைய இந்திய நாடு தோற்று போன இரண்டு மெடல்களைக் கொண்டாடுகிறது. இது எவ்வளவு அவமானகரமானது? என 2016ம் ஆண்டின் செய்தி ஒன்றைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அதற்கு அப்போது அதிரடி மன்னன் சேவாக் பதில் அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் ஒவ்வொரு சின்ன, சின்ன சந்தோஷத்தையும் கொண்டாடுபவர்கள். ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்லாமல் இன்னும் விளையாடிக் கொண்டு மட்டுமே இருப்பது அவமானம் இல்லையா? என்றார்.

உலக கோப்பையில் தொடர் தோல்வி... வங்கதேச பேட்டிங் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் நியமனம் உலக கோப்பையில் தொடர் தோல்வி... வங்கதேச பேட்டிங் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்

சேவாக்கின் டுவீட் பதிவு

உலக கோப்பையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சேவாக்கின் இந்த பழைய ட்வீட்டை தேடி கண்டு பிடித்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் டிவி பிரபலம் மோர்கன். அந்த டுவிட்டுக்கு இப்போது பதிலளித்து வம்பிழுத்திருக்கிறார் அவர்.

நண்பா

அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது: ஹாய் நண்பா என்று தமது டுவீட்டை தொடங்கி இருக்கிறார். அதற்கு இந்திய ரசிகர்கள் இங்கிலாந்து பெற்றது ஒரு வெற்றியே அல்ல என்று கிண்டல் செய்து மோர்கனை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

242 இலக்கு

242 இலக்கு

முன்னதாக, நியூசி. இங்கிலாந்து இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த உலக கோப்பை இறுதியில் இங்கிலாந்து முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. முதலில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தின் 241 ரன்னை இங்கிலாந்து எடுத்ததால் ஆட்டம் டிராவானது.

பவுண்டரிகள் கணக்கு

பவுண்டரிகள் கணக்கு

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. இதனால், ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரியை எந்த அணி அடித்தது என்று கணக்கிடப்பட்டது. அதன் அடிப்படையில் கணக்கிடும்போது இங்கிலாந்து அதிகமாக பவுண்டரிகள் எடுத்திருந்ததால், அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. இங்கிலாந்து 26 பவுண்டரிகளும், நியூசிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்தன.

Story first published: Tuesday, July 16, 2019, 20:01 [IST]
Other articles published on Jul 16, 2019
English summary
Piers morgan taunts sehwag after england world cup win.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X