For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 பேரையும் இறக்கும் இங்கிலாந்து.. இந்திய அணிக்கு எதிராக திரும்பும் சூழ்நிலை.. பிளான் எல்லாம் காலி!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பிங்க் பால் முழுக்க முழுக்க இந்திய அணிக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான மிக முக்கியமான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடக்க உள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இரண்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்க உள்ளது.

டெஸ்ட் உலகக் கோப்பை இறுதிசுற்றுக்கு தேர்வாக வேண்டும் என்றால் இந்த போட்டியில் இந்திய அணி ஒன்று வெல்ல வேண்டும், அல்லது டிரா செய்ய வேண்டும். இதனால் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

 எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தும் என்கிறார்கள். முக்கியமாக ஆண்டர்சன், போர்ட் இரண்டு பேருமே இன்று இங்கிலாந்து அணியில் ஆட வாய்ப்புள்ளது. ஆர்ச்சரும் அணியில் இடம்பெறுவர்.

ரிவர்ஸ்

ரிவர்ஸ்

இன்று பந்து தொடக்கத்தில் இருந்தே ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கு ஏற்றபடி இங்கிலாந்து அணி பாஸ்ட் பவுலர்களை இன்று அதிகம் பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் இன்று சூழ்நிலை இந்திய அணிக்கு எதிராக திரும்பலாம்.

எதிராக மாறும்

எதிராக மாறும்

அதன்படி இங்கிலாந்து அணி ரிவர்ஸ் ஸ்விங்கை தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளும். அதோடு பிங்க் பால் இங்கிலாந்து அணியின் ஸ்பீட் பவுலிங்கிற்கு அதிகம் கை கொடுக்கும். இது போக புஜாரா, கில் போன்ற வீரர்கள் ரிவர்ஸ் ஸ்விங்கில் ஆட கஷ்டப்படுவார்கள்.

கஷ்டம்

கஷ்டம்

இதை இங்கிலாந்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். ஆண்டர்சன், போர்ட் இரண்டு பேருமே இன்று களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்பீட் பவுலர்களை கவனமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

Story first published: Wednesday, February 24, 2021, 22:19 [IST]
Other articles published on Feb 24, 2021
English summary
Pink Ball will play a major role against Team India in the 3rd test with England today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X