For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிட்ச்ல எந்த மாற்றமும் இருக்காது... ஆனா நாம விளையாடறது பகலிரவு போட்டி இல்ல... ரஹானே விளக்கம்

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கவுள்ளது.

இந்த மைதானத்தில் நடைபெற்ற கடந்த போட்டியில் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்ததாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு! சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு!

இந்நிலையில் 4வது போட்டியிலும் பிட்ச் ஒரே மாதிரிதான் இருக்கும் என்றும் ஆனால் நாளைய போட்டி பகலிரவு போட்டி இல்லை என்பது மட்டுமே முக்கிய வித்தியாசம் என்றும் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்து துணை கேப்டன் ரஹானே பேசினார். அப்போது 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளை போலவே 4வது டெஸ்ட்டும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பகலிரவு டெஸ்ட் போட்டி

பகலிரவு டெஸ்ட் போட்டி

கடந்த 3வது டெஸ்ட் போட்டி 2 தினங்களில் முடிந்ததற்கு காரணம் அது பகலிரவு டெஸ்ட் போட்டியாக இருந்தது தான் என்றும் அவேர் கூறியுள்ளார். இந்த போட்டி வெறும் 140.2 ஓவர்களில் முடிந்தது. போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை கண்டது.

4வது போட்டியும் அமையும்

4வது போட்டியும் அமையும்

இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை என்று கேப்டன் விராட் கோலியும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் கடந்த இரு போட்டிகளை போலவே நாளைய போட்டியும் அமையும் என்றும் ஒரே வித்தியாசம் கடந்த போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற்றது மட்டுமே என்றும் ரஹானே குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான இங்கிலாந்து அணி

சிறப்பான இங்கிலாந்து அணி

கடந்த இரு போட்டிகளை போலவே 4வது போட்டியிலும் விக்கெட்டுகள் விழும் என்றும் மைதானத்தில் பிட்ச்சும் ஒரேமாதிரி தான் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நாளைய போட்டி எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும என்றும் அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பான அணி என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 3, 2021, 11:52 [IST]
Other articles published on Mar 3, 2021
English summary
The pitch looks pretty similar, I do not know how it is going to play, we have to wait and see
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X