For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காலி மைதானத்துலயாவது கிரிக்கெட்டை உடனடியா விளையாடணும்... அக்காங்!

மும்பை : காலி மைதானமாக இருந்தாலும் ரசிகர்கள் குவிந்துள்ள மைதானமாக இருந்தாலும் தற்போதைய சூழலில் கிரிக்கெட் போட்டிகளை உடனடியாக துவங்க வேண்டியது மிகவும் அவசியம் என்று இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL 2020 in UAE? BCCI yet to take a call

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட்டை பாதுகாப்பான முறையில் உடனடியாக துவங்க வேண்டியது அவசியம் என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடியான சூழலில், ரசிகர்களின் மனம் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பீட்டர்சன், இந்த நேரத்தில் காலி மைதானங்களிலாவது கிரிக்கெட்டை துவங்க வேண்டும் என்றும், இதன்மூலம் தொலைக்காட்சி மூலம் அதிகமான பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கன் கிரிக்கெட் வீரருக்கு 6 ஆண்டு தடை.. சைலன்ட்டாக செய்த தில்லாலங்கடி வேலைகள் அம்பலம்!ஆப்கன் கிரிக்கெட் வீரருக்கு 6 ஆண்டு தடை.. சைலன்ட்டாக செய்த தில்லாலங்கடி வேலைகள் அம்பலம்!

கொரோனாவால் முடக்கம்

கொரோனாவால் முடக்கம்

சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பாதிப்பால் முடங்கியுள்ளன. கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் செய்வதறியாது பரிதவித்து வருகின்றனர். நேரலை மூலம் அவர்கள் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே பிட்னெசை மேம்படுத்திவருகின்றனர். ஆயினும் மைதானங்களில் கிரிக்கெட்டை விளையாடும் நேரத்திற்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

உடனடியாக கிரிக்கெட்டை துவங்க வேண்டும்

உடனடியாக கிரிக்கெட்டை துவங்க வேண்டும்

இந்நிலையில் காலி மைதானமாக இருந்தாலும் கிரிக்கெட் போட்டிகளை உடனடியாக துவங்க வேண்டும் என்று இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த தொடர்களின் நிர்வாகிகள் உடனடியாக துவங்க வேண்டும் என்றும் பீட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார்.

மனஉறுதியை ஏற்படுத்த வேண்டும்

மனஉறுதியை ஏற்படுத்த வேண்டும்

இந்த நெருக்கடியான சூழலில், வீட்டிற்குள் முடங்கியுள்ள ரசிகர்களுக்கு மனஉறுதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம். விளையாட்டு போட்டிகள், அவர்களுக்குள் பாசிட்டிவ் மனநிலையை ஏற்படுத்தும். அதனால் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில், காலி மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் என்றும் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

டிவியில் ஒளிபரப்பு

டிவியில் ஒளிபரப்பு

காலி மைதானமாக இருந்தாலும், அந்தப் போட்டிகள் டிவிக்களில் ஒளிபரப்பப்படும்போது அதிக அளவலான பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்த், குவின்டன் டீ காக் போன்ற அனைவரின் மனநிலையும் இந்த விஷயத்தில் ஒத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, May 11, 2020, 11:17 [IST]
Other articles published on May 11, 2020
English summary
Fans, the public, need a morale boost -Kevin Pietersen
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X