For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நெஞ்சத் தொட்டு சொல்லுங்க... ஐபிஎல்ல இவங்கெல்லாம் கலக்குவாங்ன்னு எதிர்பார்த்தீங்களா!

ஐபிஎல்லில் இந்த சீசனில் எதிர்பார்த்ததைவிட சில வீரர்கள் அபாரமாக விளையாடி அசத்தினர்.

Recommended Video

இந்த ஐபிஎல்-ல் இவங்கெல்லாம் கலக்குவாங்ன்னு எதிர்பார்த்தீங்களா!- வீடியோ

டெல்லி: இந்த ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்ததைப் போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள் சொதப்பினர். அதே நேரத்தில் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக சில வீரர்கள் கலக்கினார்கள்.

ஐபிஎல் சீசன் 11 முடிந்துவிட்டது. இந்த சீசனில் அனைவரும் எதிர்பார்த்தபடியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.இந்த சீசனில் கண்டிப்பாக இவர் ஹிட்டடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பலரும் ஏமாற்றத்தை தந்தனர். அது மிகப் பெரிய பட்டியல்.

அதே நேரத்தில் அட இந்த ஆள் கலக்கறான்யா என்று எதிர்பார்த்ததைவிட சில வீரர்கள் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தனர்.

ஷேன் வாட்சன் :

ஷேன் வாட்சன் :

2017ல் பெங்களூர் அணிக்காக விளையாடிய வாட்சன் வெறும் 67 ரன்கள் மட்டுமே அடித்தார். அதேபோல் 4 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். சீனியர்கள் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த சீசனில் ஏலம் எடுக்கப்பட்டார். 15 ஆட்டங்களில் 2 சதம், 5 அரை சதம் என, 555 ரன்கள் அடித்தார். பைனலில் அவர் ஆடிய ஆட்டம் ஏதோ ஹைலைட்ஸ் பார்ப்பதுபோல் இருந்தது.

அம்பதி ராயுடு :

அம்பதி ராயுடு :

சரிபட்டு வரமாட்ட என்று கிட்டத்தட்ட ஒதுக்கி வைக்கப்பட்டவர் ராயுடு. சிஎஸ்கேவுக்கு வந்த நேரம், அவர் இந்திய அணிக்காகவும் மீண்டும் விளையாட உள்ளார். இந்த சீசனில் ஒரு சதம், 3 அரை சதம் என, 602 ரன்கள் குவித்தார்.

கேன் வில்லியம்சன்:

கேன் வில்லியம்சன்:

டேவிட் வார்னர் இல்லாததால் ஹைதராபாத் அணியின் கேப்டனானார் வில்லியம்சன். இல்லாவிட்டால், அவர் விளையாடும் 11 பேரில் இடம்பெற்றிருக்க மாட்டார் என்று விமர்சிக்கப்பட்டவர். 16 ஆட்டங்களில் 8 அரை சதம் என, 735 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப் வென்றார். மேலும் சிறந்த கேப்டனாகவும் விளங்கினார்.

ஜோஸ் பட்லர் :

ஜோஸ் பட்லர் :

ரூ.4.4 கோடிக்கு ராஜஸ்தானில் வாங்கப்பட்டவர் பட்லர். தொடர்ந்து 5 ஆட்டங்களில் அரை சதம் அடித்து சேவாக்கின் சாதனையை சமன் செய்தார். 13 ஆட்டங்களில் 548 ரன்கள் குவித்தார்.

சூர்யகுமார் யாதவ்:

சூர்யகுமார் யாதவ்:

மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரரான சூர்யகுமார், 4 அரை சதம் உள்பட, 512 ரன்கள் குவித்து, யாருடா இது என்று கவனிக்க வைத்தார்.

மயாங்க் மார்கண்டே:

மயாங்க் மார்கண்டே:

20 வயதாகும் மும்பை அணியின் மயாங்க் 14 ஆட்டங்களில் 15 விக்கெட்களை வீழ்த்தினார். சீசனின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவின் ராயுடு மற்றும் தோனியை ஒரே ஓவரில் வீழ்த்தி, மக்களின் கவனத்தை ஈர்க்கத் துவங்கினார்.

பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஜாட்ரன், ராஜஸ்தானுக்காக விளையாடிய ஆல் ரவுண்டர் ஸ்ரேயாஸ் கோபால், ராஜஸ்தானுக்காக விளையாடிய ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம், பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், கொல்கத்தாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா போன்றோர் இந்த சீசனில் அட போட வைத்தனர்.

Story first published: Wednesday, May 30, 2018, 13:05 [IST]
Other articles published on May 30, 2018
English summary
Few players who excelled in the ipl than expected. we have listed some of them.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X