For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

100 டி20 போட்டியில விளையாடுனது பெருமையா இருந்துச்சு... அழுதுட்டேன்... இயான் மார்கன் நெகிழ்ச்சி!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

Recommended Video

8 விக்கெட் வித்தியாசத்தில் India-வை வீழ்த்திய England.. தொடரிலும் முன்னிலை

இந்த போட்டியின்மூலம் தனது 100வது டி20 போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் நேற்றைய தினம் விளையாடியுள்ளார்.

4 போட்டிகளில் 3 டக்-அவுட்... மீண்டும் பார்மிற்கு திரும்புவாரா ராகுல்? 4 போட்டிகளில் 3 டக்-அவுட்... மீண்டும் பார்மிற்கு திரும்புவாரா ராகுல்?

100வது போட்டியில் விளையாடியது மிகவும் பெருமையான தருணம் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மார்கனின் 100வது டி20 போட்டி

மார்கனின் 100வது டி20 போட்டி

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி நேற்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி மூலம் தனது 100வது டி20 போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் விளையாடியுள்ளார். மேலும் சர்வதேச அளவில் இந்த சாதனையை மேற்கொண்டுள்ள 4வது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

பெருமையான தருணம் என மகிழ்ச்சி

பெருமையான தருணம் என மகிழ்ச்சி

நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலி, இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா ஆகியோர் முன்னதாக இந்த சாதனையை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே டி20 போட்டிகளில் 100வது போட்டியை விளையாடியது மிகவும் பெருமையான தருணம் என்று மார்கன் தெரிவித்துள்ளார்.

பட்லரிடம் பெற்ற மார்கன்

பட்லரிடம் பெற்ற மார்கன்

போட்டிக்கு முன்னதாக 100வது போட்டிக்கான கேப்பை ஜோஸ் பட்லரிடம் இருந்து பெற்றார் இயான் மார்கன். அவ்வாறு பெறும்போது தான் அழுதுவிட்டதாகவும் பட்லர் சிறப்பான தலைமை பண்புகளை கொண்டவர் மற்றும் தன்னுடைய சிறந்த நண்பர் என்றும் மார்கன் குறிப்பிட்டுள்ளார். உலக தரத்திலான வீரர் என்றும் கூறியுள்ளார்.

சிறப்பாக உணர்கிறேன்

சிறப்பாக உணர்கிறேன்

ஜோஸ் பட்லர் தன்னை பாராட்டி பேசிய வார்த்தைகள் தன்னுடைய இதயத்தை தொட்டதாகவும் அதற்காக தான் மிகவும் சிறப்பாக உணர்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இயான் மார்கனின் நேற்றைய 100வது போட்டியை பட்லர், பேர்ஸ்டோ உள்ளிட்டவர்கள் இணைந்து வெற்றி போட்டியாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 17, 2021, 22:50 [IST]
Other articles published on Mar 17, 2021
English summary
With the win the 3rd T20I, England has now gained a 2-1 lead in the series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X