For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன்கூட கைகோர்த்தா போதும்... நம்மோட திறமைகள் எல்லாம் வெளிய வந்துடும்.... சுந்தர் புகழ்ச்சி

சென்னை : ஆர்சிபியின் பௌலர் வாஷிங்டன் சுந்தர் கடந்த தொடர்களிலும் தற்போது ஐபிஎல் சீசனிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் அறிமுக போட்டியில் காப்பாவில் விளையாடிய சுந்தர் தற்போது ஐபிஎல்லில் தனது சிறப்பான ஆல்-ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இது ஆரம்பம் தான்.. தோனி இதனை செய்தால் முடிவே வேற... முன்னாள் வீரரின் கருத்தால் ரசிகர்கள் உற்சாகம்! இது ஆரம்பம் தான்.. தோனி இதனை செய்தால் முடிவே வேற... முன்னாள் வீரரின் கருத்தால் ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் ஆர்சிபி கேப்டனுடன் இணைந்து செயலாற்றினால் நமது சிறப்பான திறமைகள் அனைத்தும் வெளிவரும் என்று சுந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி ஆல்-ரவுண்டர்

ஆர்சிபி ஆல்-ரவுண்டர்

ஐபிஎல் 2021 தொடரின் ஆர்சிபி பௌலிங் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து அந்த அணிக்காக மட்டுமின்றி முன்னதாக ஆஸ்திரேலியா மற்றம் இங்கிலாந்து தொடர்களிலும் தனது சிறப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது ஐபிஎல் 2021 தொடரின் ஆர்சிபியின் வெற்றித் தருணங்களில் உடன் கைகொடுத்து வருகிறார்.

உதவிவரும் கோலி

உதவிவரும் கோலி

பேட்டிங்கானாலும் பௌலிங்கானாலும் ஒரு கை பார்த்து விடுகிறார் வாஷிங்டன் சுந்தர். இந்நிலையில் பல்வேறு தருணங்களில் கேப்டன் விராட் கோலி தனக்கும் தனது வளர்ச்சிக்கும் சிறப்பாக உதவி வருவதாக சுந்தர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த 4 -5 ஆண்டுகளாக அவர் மைதானத்தில் மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் தனது வளர்ச்சியில் சிறப்பான பங்கு வகித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறப்பான ஐபிஎல் 2021 சீசன்

சிறப்பான ஐபிஎல் 2021 சீசன்

விராட்டிடம் இருந்த இந்த காலகட்டத்தில் கற்று கொண்டவையே தான் சிறப்பான கிரிக்கெட் வீரராக மாற காரணமாக அமைந்துள்ளதாகவும் சுந்தர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 4 மாதங்கள் தனது கிரிக்கெட் கேரியரில் சிறப்பானவற்றை கொண்டு வந்துள்ளதாகவும் ஐபிஎல் 2021 சீசனும் சிறப்பாக அமையும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னம்பிக்கை அளிக்கிறது

தன்னம்பிக்கை அளிக்கிறது

முதல் 6 ஓவர்களை ஸ்பின்னர் ஒருவரிடம் கொடுப்பது மிகவும் சிறப்பானது என்றும் அதற்காக விராட் கோலிக்கு தான் நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் சிறப்பாக விளையாடுவது தன்னை சிறப்பான ஸ்பின்னராக உணர வைப்பதாகவும் அவர் மேலும் கூறினார் . இது தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

பேட்டிங் நம்பிக்கை

பேட்டிங் நம்பிக்கை

இதன்மூலம் விராட் கோலி தன்னை சிறப்பான டி20 பௌலராக மாற உதவியுள்ளதாகவும் முதல் 6 ஓவர்களில் பந்துவீசுவதை தான் சவாலாக விரும்பி செய்ததாகவும் அவர் மேலும் கூறினார். இதேபோல அணிக்கு தேவையான பேட்ஸ்மேனாக தான் விளையாடுவது குறித்தும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த சீசனில் ஆர்சிபி நம்பிக்கையுடன் அதிக போட்டிகளில் வெல்லும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 22, 2021, 20:27 [IST]
Other articles published on Apr 22, 2021
English summary
We are very confident of him winning a lot of games for RCB -Sundar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X