குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக தவறான பேச்சு.. சர்ச்சையில் இந்திய வீரர் அஸ்வின்..போலீசில் புகார்!

சிட்னி: இந்திய அணியின் மூத்த வீரர் அஸ்வின் வெளியிட்ட வீடியோ ஒன்றால் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

இந்திய அணியின் மூத்த ஸ்பின் பவுலர் அஸ்வின் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்வின் முக்கியமான காரணமாக இருந்தார்.

கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே அஸ்வின் மைதானத்தில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை குறித்து வீடியோ வெளியிடுவது உண்டு. இதற்காக அவர் யூ டியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார்.

சேனல்

சேனல்

தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடருக்காக கங்காரு பூமி என்ற பெயரில் இவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த வீடியோதான் தற்போது வைரலாகி உள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் நடந்த சுவாரசியமான சம்பவங்களைதொகுத்து அஸ்வின் வீடியோவாக வழங்கி வந்தார்.

வீடியோ

வீடியோ

இந்த நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர் அஸ்வின் வெளியிட்ட வீடியோ ஒன்றால் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அஸ்வினும் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதரும் இணைந்து இந்த வீடியோவில் பேசி இருந்தனர்.

வைரல்

வைரல்

முதல் டெஸ்ட் போட்டியிலும் 36 ரன்களுக்கு அவுட் ஆனது, மூன்றாவது டெஸ்ட் போட்டியை கஷ்டப்பட்டு டிரா செய்தது, கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றது என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இவர்கள் இருவரும் வீடியோவில் பேசி இருந்தனர். களத்தில் நடந்த பல சுவாரசியமான சம்பவங்களை இவர்கள் பகிர்ந்தனர்.

இழிவு

இழிவு

இந்த நிலையில் அஸ்வின் இந்த வீடியோவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருந்தார். ஒரு இழிவான வார்த்தையை சொல்லி ஆஸ்திரேலிய வீரர்கள் குறித்து அஸ்வின் பேசி இருந்தார். அஸ்வின் இப்படி பேசியது வீடியோவாக வெளியானது.

சிக்கல்

சிக்கல்

அஸ்வின் அந்த சொல்லை பயன்படுத்தியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இதன் காரணமாக தற்போது அஸ்வின் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் மற்றும் ஸ்ரீதர் இருவரையும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகேயன்

கார்த்திகேயன்

கார்த்திகேயன் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். அதில், அஸ்வின் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் குறிப்பிட்ட சமுதாய மக்களின் மனதை புண்படுத்திவிட்டனர். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Police complain against Ashwin for his youtube video on India vs Australia series.
Story first published: Monday, January 25, 2021, 9:49 [IST]
Other articles published on Jan 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X