For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆல்-அவுட் ஆனால் அலேக்கா பணம்.. இலங்கை கிரிக்கெட் வீரர்களை அணுகிய புக்கிகள்! விசாரணைக்கு உத்தரவு

By Veera Kumar

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்களை சூதாட்ட தரகர்கள் அணுகி விவகாரம் குறித்து போலீஸ் விசாரணைக்கு அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. காலே நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் இருந்தது.

இந்நிலையில், சூதாட்ட தரகர்கள் சிலர், இலங்கை விக்கெட் கீப்பர் குசால் பெரேரா மற்றும் பவுலர் ரங்கனா ஹீரத் ஆகிய இரு வீரர்களை அணுகியுள்ளனர்.

ஆல்-அவுட்

ஆல்-அவுட்

2வது இன்னிங்சில் இலங்கை குறைந்த ஸ்கோரில் ஆல்-அவுட் ஆகும்வகையில் நீங்கள் பேட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அவ்வாறு நடந்தால், தங்களுக்கு சூதாட்டத்தில் அதிக பணம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

மறுப்பு

மறுப்பு

முதலில் அவர்கள் அணுகிய, குசால் பெரேரா, இதை மறுத்துவிட, இரண்டாவதாக ஹீரத்தை அவர்கள் அணுகியுள்ளனர். ஹீரத்தும், இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.

ரூ.1 கோடி லஞ்சம்

ரூ.1 கோடி லஞ்சம்

சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் தருவதாக கூறியும், இவ்விரு வீரர்களும் சூதாட்டதிற்கு உடன்பட மறுத்துவிட்டனராம். இதையடுத்து, சூதாட்ட தடுப்பு பிரிவுக்கும், இவ்விரு வீரர்களும் புகார் அளித்தனர்.

விசாரணை

விசாரணை

இந்த விவகாரம் குறித்து இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிரி ஜெயசேகரா கூறுகையில், லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Story first published: Monday, December 21, 2015, 10:40 [IST]
Other articles published on Dec 21, 2015
English summary
The Sri Lankan government has said it has launched a probe into a bid to bribe members of the national cricket team to under-perform in a recent Test match against the West Indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X