For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வினுக்கு பௌலிங் கொடுத்திருக்கணும்... பெரிய மிஸ்டேக்தான்... ரிக்கி பாண்டிங் ஆதங்கம்!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டி மும்பையில் நடைபெற்ற நிலையில், அதில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

Recommended Video

IPL 2021 CSK vs PBKS: Predictable Playing 11 | OneIndia Tamil

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டாவதாக ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதுதான் சூட்சமம்.. பார்த்து கத்துக்குங்க.. தோனிக்கு பாடம் எடுத்த சாம்சன்.. சிஎஸ்கே வெல்ல ஒரே வழி!இதுதான் சூட்சமம்.. பார்த்து கத்துக்குங்க.. தோனிக்கு பாடம் எடுத்த சாம்சன்.. சிஎஸ்கே வெல்ல ஒரே வழி!

இதனிடையே இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணம் குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் கோச் ரிக்கி பாண்டிங் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

7வது போட்டி

7வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 7வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இந்நிலையில் அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சேஸிங்கை சிறப்பாக முடித்து வெற்றி கொண்டது.

அடுத்தடுத்த விக்கெட்டுகள்

அடுத்தடுத்த விக்கெட்டுகள்

நேற்றைய போட்டியில் ரிஷப் பந்த் அரைசதத்தை கடந்திருந்தார். டாம் கர்ரன், லலித் யாதவ் ஆகியோரும் அணிக்கு கைகொடுத்தனர். ஆயினும் எதிரணியின் பந்து வீச்சில் அணியில் வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதையடுத்து 147 ரன்களை எதிரணிக்கு இலக்காக கொடுத்து டெல்லி கேபிடல்ஸ் பந்து வீசியது.

எளிதான வெற்றி

எளிதான வெற்றி

ஆயினும் சிறப்பான பௌலிங்கை கொடுத்து எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்த போட்டியை டெல்லி கேபிடல்ஸ் அணி கைநழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மோரீஸ் இறுதி 2 ஓவர்களில் 4 சிக்ஸ்களை அடித்தது வெற்றியை அந்த அணியின் பக்கம் திருப்பியது.

பாண்டிங் குற்றச்சாட்டு

பாண்டிங் குற்றச்சாட்டு

இந்நிலையில் அவருக்கு இறுதி ஓவர்களில் எளிதான பந்துகளில் தங்களது அணியின் பௌலர்கள் டாம் கர்ரன் உள்ளிட்டோர் கொடுத்துவிட்டதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும் பனிப்பொழிவும் நேற்றைய போட்டியில் முக்கிய பிரச்சினையை அளித்ததாகவும் தெரிவித்தார்.

சிறப்பான அஸ்வின்

சிறப்பான அஸ்வின்

அணியின் ஸ்பின்னர் ஆர் அஸ்வின் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் 3 ஓவர்களைபோட்டு 14 விக்கெட்டுகளை மட்டுமே கொடுத்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து அஸ்வினுக்கு பௌலிங் கொடுத்திருக்க வேண்டும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். அப்படி கொடுக்காதது மிகப்பெரிய தவறு என்றும் இதுகுறித்து அணியின் கூட்டத்தில் பேசுவேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறப்பாக பௌலிங் செய்யாத அஸ்வின்

சிறப்பாக பௌலிங் செய்யாத அஸ்வின்

நேற்றைய போட்டியில் சிறப்பாக அஸ்வின் பந்து வீசியதாகவும் 3 ஓவர்களில் ஒரு பவுண்டரியை கூட கொடுக்காமல் 14 ரன்களை மட்டுமே அவர் அளித்ததாகவும் பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசாத அஸ்வின், தன்னுடைய தொடர் பயிற்சிகளில் நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Story first published: Friday, April 16, 2021, 13:36 [IST]
Other articles published on Apr 16, 2021
English summary
Not giving off-spinner Ravichandran Ashwin his full quota of overs was "probably a mistake" -Ponting says
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X