For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பான்டிங் புத்தகத்தால் கிளார்க் 'வேலை' பறி போகுமா...?

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்குக்கு ஒரு கேப்டனுக்குரிய திறமை சுத்தமாக இல்லை. சுத்த வேஸ்ட் அவர் என்று சரமாரியாக சாடியுள்ளார் முனனாள் கேப்டன் ரிக்கி பான்டிங்.

அவர் எழுதியுள்ள At the Close of Play என்ற சுயசரிதைப் புத்தகத்தில்தான் கிளார்க்கை போட்டு வாங்கியுள்ளார் பான்டிங். இந்த புத்தகத்தால் கிளார்க்குக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பான்டிங் சொல்வது தவறு என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

699 பக்க புத்தகம்

699 பக்க புத்தகம்

பான்டிங்கின் புத்தகம் 699 பக்கங்களைக் கொண்டதாகும். இதில் கிளார்க்கை அவர் கடுமையாக விமர்சித்துள்ளாராம்.

நெருக்கடிகளைக் கையாளத் தெரியவில்லை

நெருக்கடிகளைக் கையாளத் தெரியவில்லை

அதில் கிளார்க்குக்கு நெருக்கடியான சூழ்நிலையை சரியாக கையாளத் தெரியவில்லை என்று சாடியுள்ளாராம் பான்டிங். மேலும், ஒரு அணி வீரராக அவர் செயல்படுவதில்லை.

சுயநலம் ஜாஸ்தி

சுயநலம் ஜாஸ்தி

கிளார்க்குக்கு சுயநலமே பெரிதாக இருக்கிறது. குடும்பத்தைக் குறித்துத்தான் அவர் அதிகம் கவலைப்படுகிறார். மாறாக தனது அணி நன்றாக செயல்படுகிறதா என்பதை அறிய ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறியுள்ளராம் பான்டிங்.

பேச்செல்லாம் ஓ.கே.தான் தம்பி....

பேச்செல்லாம் ஓ.கே.தான் தம்பி....

மேலும் பான்டிங் கூறுகையில், வெளியில் தான் எல்லாவற்றையும் சரியாக செய்வதாக பேசுகிறார் கிளார்க். ஆனால் உள்ளுக்குள் அவர் அணியினருடன் ஆத்மார்த்தமாக எதையும் விவாதிப்பதில்லை. குழு விவாதங்களில் சரியாக பங்கேற்பதில்லை. ஒரு கேப்டனாக அவர் சரிவர செயல்படுவதில்லை என்பது எனது கருத்து என்று கூறியுள்ளாராம் பான்டிங்.

அடிக்கடி அறைக்குள் முடங்குவது கேப்டனுக்கு அழகா...

அடிக்கடி அறைக்குள் முடங்குவது கேப்டனுக்கு அழகா...

மேலும், அணி சரிவர விளையாடாவிட்டால் மூட் அவுட் ஆகி அறைக்குள் முடங்கிப் போய் விடுகிறார். இது ஒரு கேப்டனுக்கு அழகா என்றும் கேட்டுள்ளார் பான்டிங்.

கிளார்க்குக்கு நெருக்கடி

கிளார்க்குக்கு நெருக்கடி

பான்டிங் கூறுவதை சுலபமாக நிராகரிக்கக் கூடிய நிலையில் தற்போது கிளார்க் இல்லை. காரணம், அடுத்தடுத்து பல முக்கியத் தோல்விகளை அவரது தலைமையில் ஆஸ்திரேலியா கண்டுள்ளது. எனவே பான்டிங் சொல்வது உண்மையாக இருக்கலாம் என்றுதான் அனைவரும் எண்ணத் தோன்றும்.

மிக்கி ஆர்தரும் இதையேதான் சொல்கிறார்

மிக்கி ஆர்தரும் இதையேதான் சொல்கிறார்

அதை விட முக்கியமாக ஆஸ்திரேலியா பயிற்சியாளராக இருந்து பின்னர் நீக்கப்பட்டவரான தென் ஆப்பிரிக்காவின் மிக்கி ஆர்தரும் கூட கிளார்க் நெருக்கடியில் இருப்பதாகவே கூறியுள்ளார். மேலும் பான்டிங்கைப் போலவே அவரும் கிளார்க்கின் திறமையை கேள்வி கேட்டுள்ளார்.

கிளார்க் தப்புவாரா.. அல்லது வேலையை பறிகொடுப்பாரா...

Story first published: Monday, October 28, 2013, 14:32 [IST]
Other articles published on Oct 28, 2013
English summary
The explosive claims made by Australia's former cricket captain Ricky Ponting in his autobiography At the Close of Play is believed to have added to the immense pressure on the current Test skipper Michael Clarke. In the 699-page book, Ricky Ponting has questioned Michael Clarke's ability to handle pressure.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X