For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரோட சப்போர்ட் அப்படி... அதனாலதான் பௌலர்கள் தலையில தூக்கிவச்சி கொண்டாடுறாங்க -ஓஜா

மும்பை : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பௌலர்களின் கேப்டன் என்று முன்னாள் ஸ்பின்னர் பிரக்யன் ஓஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Recommended Video

Pragyan Ojha called Dhoni as Bowler's Captain

அணியில் சக வீரர்களுக்கு தோனியின் ஆதரவு அதிகமாக இருக்கும். அதனால்தான் அவரை அதிகமான பௌலர்கள் தொடர்ந்து புகழ்கிறார்கள் என்றும் ஓஜா கூறியுள்ளார்.

தோனியின்கீழ் 24 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 18 சர்வதேச ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள ஓஜா, சர்வதேச போட்டிகளின் அனைத்து வடிவங்களில் இருந்தும் கடந்த வெள்ளிக்கிழமை ஓய்வு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

இந்தியாவிற்காக 24 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 18 சர்வதேச ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள ஸ்பின்னர் பிரக்யன் ஓஜா, கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச அளவிலான கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். இவர் பெரும்பாலும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையின்கீழ் விளையாடியுள்ளார்.

தோனி குறித்து பாராட்டு

தோனி குறித்து பாராட்டு

சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ள முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, தற்போது ஐபிஎல் 2020 சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக விளையாடவுள்ளார். இதற்கென அவர் வரும் 2ம் தேதிமுதல் சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தோனி, பௌலர்களின் கேப்டன் என்று ஓஜா புகழ்ந்துள்ளார்.

ஓஜா கருத்து

ஓஜா கருத்து

தன்னை புரிந்துக்கொள்ளக்கூடிய கேப்டன் ஒவ்வொரு பௌலருக்கும் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஓஜா, அவர் பௌலர்களுக்கு அளிக்கக்கூடிய ஆதரவு காரணமாகவே அவருடன் பணிபுரிந்த அனைத்து பௌலர்களும் அவரை புகழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். நெருக்கடியான போட்டிகளில் பீல்டிங்கை சரியாக அமைத்து தருவது, பௌலர்களின் மனதை தெளிவாக வைத்துக் கொள்வது போன்ற உதவிகளை அவர் பௌலர்களுக்கு செய்து தருவார் என்றும் ஓஜா கூறியுள்ளார்.

சச்சினின் பேர்வெல் டெஸ்ட்

சச்சினின் பேர்வெல் டெஸ்ட்

கடந்த 2013ல் வான்கடே மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா மோதிய போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. சச்சின் டெண்டுல்கரின் இறுதி டெஸ்ட் போட்டியான இதில் மேன் ஆப் த மேட்ச் பட்டத்தை வென்ற ஓஜா, கடந்த 2018ல் பீகார் அணிக்காக விளையாடினார். இதுவே இவரது இறுதிப்போட்டி.

Story first published: Wednesday, February 26, 2020, 16:11 [IST]
Other articles published on Feb 26, 2020
English summary
Former India spinner Pragyan Ojha praised Former captain MS Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X