For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்க இருந்து கிளம்பற வரைக்கும் நல்லாதான் இருந்தாரு... உண்மையை உரக்க சொன்ன அணி

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதன் முதலில் கேகேஆர் அணியில்தான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

சிஎஸ்கே செய்த அந்த காரியம்.. தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்.. தோனியின் ஐடியாவா? சிஎஸ்கே செய்த அந்த காரியம்.. தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்.. தோனியின் ஐடியாவா?

தற்போது 4வது வீரராக கேகேஆர் அணியின் பிரசித் கிருஷ்ணாவிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஐபிஎல் 2021 தொடரின் கொரோனா பாதிப்பை முதலில் கண்டறிந்த அணி கேகேஆர்தான். அந்த அணியின் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்குத்தான் முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து மற்ற அணி வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு வந்தது.

பிரசித் கிருஷ்ணாவிற்கு கொரோனா

பிரசித் கிருஷ்ணாவிற்கு கொரோனா

கேகேஆர் அணியிலேயே நியூசிலாந்து வீரர் டிம் ஷீபெர்ட்டுக்கும் கொரோனா பாதித்துள்ளது. இந்நிலையில் தற்போது அணியிலிருந்து பெங்களூருவில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற பிரசித் கிருஷ்ணாவிற்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அணியில் இடம்பெற்றுள்ளார்.

இம்மாத இறுதியில் பயணம்

இம்மாத இறுதியில் பயணம்

இம்மாத இறுதியில் இந்த அணி இங்கிலாந்துக்கு தனது பயணத்தை துவக்கவுள்ள நிலையில், அதற்குள் கொரோனா தாக்கத்தில் இருந்து பிரசித் கிருஷ்ணா விடுபட்டால் மட்டுமே அவரால் இந்த அணியின் பயோ பபுளில் இணையமுடியும். இதனிடையே பிரசித் கிருஷ்ணா தனது பெங்களூரு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பயோ பபுளில் பாதிப்பில்லை

பயோ பபுளில் பாதிப்பில்லை

இதனிடையே அவர் கேகேஆர் அணியின் பயோ பபுளில் இருந்து வெளியேறியபோது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பெங்களூருவில் உள்ள தனது வீட்டிற்கு சென்றவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கேகேஆர் அணி சார்பில் கூறப்பட்டுள்ளது.

Story first published: Sunday, May 9, 2021, 14:01 [IST]
Other articles published on May 9, 2021
English summary
Prasidh Krishna was tested positive for COVID while returning home at Banglore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X