ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!

டெல்லி: ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் விரைவில் நடக்க உள்ள நிலையில் பஞ்சாப் அணி முக்கியமான வீரர்களை ரிலீஸ் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் மூன்றாவது வாரம் நடக்க உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தாங்கள் ரிட்டென்சன் செய்ய விரும்பும் வீரர்களையும், ரிலீஸ் செய்ய விரும்பும் வீரர்களையும் பற்றிய லிஸ்டை இரண்டு நாட்கள் முன் வெளியிட்டது.

பல முக்கிய அணிகள் நிறைய வீரர்களை ரிலீஸ் செய்து ஆச்சர்யப்படுத்தி உள்ளது. அதிலும் பஞ்சாப் அணி இதில் அவசரப்பட்டு சில தவறான முடிவுகளை எடுத்துள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப்

ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் விரைவில் நடக்க உள்ள நிலையில் பஞ்சாப் அணி முக்கியமான வீரர்களை ரிலீஸ் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது. அணியில் பல வருடங்களாக இருந்த மேக்ஸ்வெல் விடுவிக்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த தொடரில் சரியாக ஆடவில்லை.

 தொடர் எப்படி நடக்கும்

தொடர் எப்படி நடக்கும்

பிக்பாஷ் தொடரில் நன்றாக ஆடினாலும் இந்திய மண்ணில் இவர் பெரிய அளவில் சிறப்பாக ஆட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இந்த நிலையில் பஞ்சாப் அணியில் இருந்து இவர் விடுக்கப்பட்டுள்ளார் . அதேபோல் முக்கியமான வீரர்களின் ஜிம்மி நீசம், ஷெல்டன் காட்ரல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும்

ஆனால் இதை எல்லாம் விட அதிர்ச்சி அளிக்கும் விஷயம் பஞ்சாப் அணியில் இருந்து முஜீப் உர் ரஹ்மான் நீக்கப்பட்டதுதான். இவர் சர்வதேச அளவில் மிக சிறந்து விளங்கும் டி 20 ஆல் ரவுண்டர். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் முக்கியமான நேரங்களில் கை கொடுப்பார். ஆனால் இவரை பஞ்சாப் அணி நீக்கி உள்ளது .

மோசமான முடிவு

மோசமான முடிவு

இஷான் பரோல் போன்ற வீரர்களை தக்க வைத்துவிட்டு முஜீப் உர் ரஹ்மான் போன்ற வீரர்களை எல்லாம் பஞ்சாப் அணி நீக்கி உள்ளது. அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா உண்மையில் சுயநினைவோடுதான் இந்த முடிவை எடுத்தாரா அல்லது இதில் வேறு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று தெரியவில்லை.

கும்ப்ளே

கும்ப்ளே

அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே கொடுத்த ஐடியாவாக கூட இது இருக்கலாம் என்கிறார்கள். அதே சமயம் முஜீப் உர் ரஹ்மான் இந்த ஐபிஎல் ஏலத்தில் கவனிக்கப்படுவார். இவரை ஏலம் எடுக்க பல முக்கியமான அணிகள் முயற்சி செய்யும் என்கிறார்கள் .

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2021: Preity Zinda decision to release Mujeeb Ur Rahman makes Punjab fans angry.
Story first published: Friday, January 22, 2021, 14:34 [IST]
Other articles published on Jan 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X