For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிராவிட்க்கு தலைவலி கொடுக்கும் வீரர்கள்..? எப்படி சமாளிக்க போறாங்க??

மும்பை; இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலிருந்து ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் விலகினர்.

இந்த நிலையில், தொடக்க வீரர்களாக சுப்மான் கில், மாயங் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். இந்த தொடரில் சுப்மான் கில் ஒரு அரைசதம் விளாச, மாயங் அகர்வால் சதம் விளாசினார்.

“நோட் பண்ணி வச்சிக்கங்க” சீனியர்களின் இடங்களை பறிக்கப்போகும் 5 இளம் வீரர்கள்.. எச்சரிக்கும் பாண்டிங்“நோட் பண்ணி வச்சிக்கங்க” சீனியர்களின் இடங்களை பறிக்கப்போகும் 5 இளம் வீரர்கள்.. எச்சரிக்கும் பாண்டிங்

தற்போது ஓய்வில் உள்ள ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பினால், யாரை விடுவது, யாரை சேர்ப்பது என்ற தலைவலி பி.சி.சி.ஐ.க்கு ஏற்பட்டுள்ளது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

இதனால் விழா காலத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முன்பதிவு செய்யும் கூட்டத்தை போல், ஒரு இடத்திற்கு நான்கு இந்திய வீரர்கள் போட்டி போடுகின்றனர். கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டு நிரந்தர இடத்தை பிடித்தனர். தற்போது இளம் வீரர்கள் சுப்மான் கில்லும், மாயங் அகர்வாலும் அசத்தியுள்ளனர்

காத்திருக்கும் வீரர்கள்

காத்திருக்கும் வீரர்கள்

இவர்களை தவிர தென்னாப்பிரிக்கா ஏ தொடரில் விளையாடிய பிரியங் பாஞ்சல், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரும் கலக்கி உள்ளனர்.இதில் அனைவருமே தொடக்க வீரர்கள் என்பதால் அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு இயற்கையாகவே அழுத்தம் ஏற்படும்

வாய்ப்பு

வாய்ப்பு

இதே போன்று நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர், விஹாரி உள்ளிட்ட வீரர்களும், விக்கெட் கீப்பருக்கு ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், பரத், சாஹா போன்ற வீரர்களும் சுழற்பந்துவீச்சுக்கு அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் என 3 வீரர்களும் உள்ளனர். இதில் யாருக்காவது வாய்ப்பு தரவில்லை என்றால் ரசிகர்களும் நம்மை வறுத்து எடுத்துவிடுவார்களே என்ற அச்சமும் பி.சி.சி.ஐ.க்கு இருக்க தானே செய்யும்.

Recommended Video

Who is Rachin Ravindra? Kiwis Cricketer named after Rahul and Sachin | OneIndia Tamil
வேறு வழி

வேறு வழி

ஒரு காலத்தில் தொடக்க வீரர் என்றால் இவர் தான், அவருக்கு பதில் வேறு ஆளே கிடையாது என்ற நிலை மாறி தற்போது ஒரு இடத்திற்கு இத்தனை பேர் போட்டியிடுவது இந்திய கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமான விஷயம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் டெஸ்ட் போட்டிக்கு ஒரு அணி, ஒருநாள் போட்டிக்கு ஒரு அணி என்று இருவேறு அணிகளை உருவாக்கினால், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் யோசனை தெரிவித்தனர்.

Story first published: Friday, December 3, 2021, 19:40 [IST]
Other articles published on Dec 3, 2021
English summary
Selection Dileam For Team India as Multiple Players scored Well for single slot. Who Will be in the India tour of South Africa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X