For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் கோப்பை: வாழ்வா? சாவா? கடும் நெருக்கடியில் இங்கிலாந்தை நாளை எதிர்கொள்ளும் ஆஸி

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இங்கிலாந்து வென்றாக வேண்டிய நெருக்கடியில் ஆஸ்திரேலியா நாளை மோதுகிறது.

By Mathi

பிர்மிங்காம்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளைய போட்டியில் இங்கிலாந்தை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா. அதேநேரத்தில் அரை இறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில் ஆஸ்திரேலியாவை மூட்ட கட்ட வைத்துவிட வேண்டும் என்பதில் இங்கிலாந்து அணியும் தீவிரமாக இருக்கிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆஸ்திரேலியா அணி நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளை எதிர்கொண்டது. ஆனால் இந்த இரு போட்டிகளின் போதும் மழை தொடர்ந்து குறுக்கிட்டு ஆஸ்திரேலியாவை சோதித்தது. இதனால் ஆஸ்திரேலியா இரு போட்டிகள் மூலம் தலா ஒரு புள்ளிதான் கிடைத்தது.

இக்கட்டில் ஆஸி.

இக்கட்டில் ஆஸி.

அதேநேரத்தில் குரூப் ஏவில் உள்ள இங்கிலாந்து அணியோ தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்தை 8 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தியது. நியூசிலாந்து அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிகரமாக அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது இங்கிலாந்து அணியை வென்றால்தான் தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலையில் ஆஸ்திரேலியா இக்கட்டான நிலையில் உள்ளது. இல்லையெனில் தொடரைவிட்டு வெளியேற வேண்டிய நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலியா.

அசத்தல் ஆட்டம்

அசத்தல் ஆட்டம்

முந்தைய இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் அந்த அதிரடி ஆட்டம் தொடர வாய்ப்புள்ளது. மழை குறுக்கிடாமல் இருந்தால் இங்கிலாந்தை ஒரு கை பார்க்கும் முடிவில்தான் ஆஸ்திரேலியாவும் விளையாடும்.

இங்கிலாந்து வெல்லும்

இங்கிலாந்து வெல்லும்

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஹஸ்ஸி, இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி எப்போதும் கடுமையானதாகத்தான் இருக்கும். நாளைய போட்டியில் இங்கிலாந்து வெல்ல சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்கள் விவரம்

வீரர்கள் விவரம்

இரு அணி வீரர்கள் விவரம்: இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோவ், ஜேக் பால், பில்லிங்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், பிளங்கெட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிரிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஸ்டீவன் பின்

ஆஸ்திரேலியா வீரர்கள்: ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), டேவிட் வார்னர், ஆரோன் ஸ்மித், கம்மின்ஸ், ஹாஸ்டிங்ஸ், ஜாஸ் ஹாஸில்வுட், டிராவிஸ் ஹெட், ஹென்றிக்ஸ், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், பட்டின்சன், ஸ்டார்க், ஸ்டோனிஸ், மேத்யூ வேடு, ஜாம்பா

Story first published: Friday, June 9, 2017, 17:01 [IST]
Other articles published on Jun 9, 2017
English summary
Preview: Champions Trophy: Match 10: Australia Vs England on June 10 Australia will be desperately hoping to play a full game under clear skies when they face arch-rivals England in their must-win Champions Trophy clash tomorrow (June 10).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X