For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆரம்பமே அமர்க்களம்.. சவுதி பந்தை சாத்திய பிரித்வி ஷா.. ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள்

Recommended Video

என்ன ஆச்சு பெங்களூரு அணியினருக்கு ? டெல்லியிடமும் தோல்வி

பெங்களூரு: 150 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆட தொடங்கிய டெல்லி அணி அதிரடியாக ஆடி வருகிறது. ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை வெளுத்து பெங்களூரு அணியை கதிகலங்க வைத்தார் பிரித்வி ஷா.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 150 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது.

தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், மீசை முறுக்கி தவானும் களத்துக்கு வந்தனர். ஏதோ மாயாஜாலம் செய்து ரசிகர்களை குஷிப்படுத்துவது போல வந்த தவான்.. அதே வேகத்தில் வெளியேறினார்.

அவுட்டானார் தவான்

அவுட்டானார் தவான்

முதல் ஓவரை சவுதி வீசினார். அந்த ஓவரில் 3வது பந்தில் எந்த ரன்னும் எடுக்காமல் டக் அவுட்டாகி சையினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடக்கமே பெங்களூரு அணிக்கு நம்பிக்கை அளிப்பது போன்று இருந்தது.

ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள்

ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள்

ஆனால்... 3வது ஓவரில் பிரித்வி ஷாவின் பவுண்டரி ஆட்டம் பெங்களூரு அணியின் வயிற்றில் கிலோ கணக்கில் புளியை கரைத்தது எனலாம். முதல் பந்தில் பவுண்டரி, 2வது பந்தில் பவுண்டரி என 5 பந்துகளில் பவுண்டரிகளாக வெளுத்து தள்ளினார் பிரித்வி ஷா.

சோகமான கோலி

சோகமான கோலி

என்ன பண்ணலாம் என்று தெரியாமல் உதட்டை கடித்துக் கொண்டும், தொப்பியை சரி செய்து கொண்டும் சோகமாக காட்சியளித்தார் கோலி. பெங்களூரு அணியின் பவுலர்களை டெல்லி அணி பதம் பார்க்க, ரன்கள் வந்து கொண்டே இருந்தன.

ஓவருக்கு 9 ரன்கள்

ஓவருக்கு 9 ரன்கள்

எதை பற்றியும் கவலைப்படாமல் பிரித்வி ஷா மற்றும் ஸ்ரேயாஸ் அய்யரும் ரன்களை குவிக்க தொடங்கினர். சராசரியாக ஒரு ஓவருக்கு 9 ரன்கள் என்ற கணக்கில் அணிக்கு ரன்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.

Story first published: Sunday, April 7, 2019, 18:39 [IST]
Other articles published on Apr 7, 2019
English summary
Prithvi sha smashed southee bowling and scored 5 boundaries in an over.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X