For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ப்ரித்வி ஷாவை வைத்து ஓசி விளம்பரமா பண்றீங்க? ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுங்க

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் இணைந்து தன் முதல் சர்வதேச போட்டியில் சதம் அடித்த ப்ரித்வி ஷா இந்தியா முழுவதும் ஒரே நாளில் பிரபலமாகி விட்டார்.

பதினெட்டு வயதே ஆன ப்ரித்வி ஷாவின் ஆட்டம் அதிரடியாக இருப்பதோடு அவர் எதிரணியை பற்றி அதிகம் பொருட்படுத்துவதில்லை. அதே பாணியில் உள்ளூர் போட்டிகளில் ஆடிய அவர், தன் முதல் சர்வதேச போட்டியிலும் அப்படியே ஆடி சதம் அடித்து பல சாதனைகள் புரிந்தார்.

அவர் சதம் அடித்த பின் சமூக வலைதளங்கள் முழுவதும் அவரை வைத்து செய்திகளும், ட்வீட்களும் பறந்தன.

ஒரு விளம்பரம்…

ஒரு விளம்பரம்…

அப்போது சில பெரிய நிறுவனங்கள், ப்ரித்வி ஷாவை வாழ்த்தும் சாக்கில் தங்கள் பொருட்களுக்கு, பிராண்ட்களுக்கு விளம்பரம் தேடிக் கொண்டனர் என குற்றம் சாட்டியுள்ளது ப்ரித்வி ஷாவின் விளம்பர வாய்ப்புகளை கையாளும் பேஸ்லைன் என்ற நிறுவனம்.

நிறுவனங்கள் போட்ட ட்வீட்

நிறுவனங்கள் போட்ட ட்வீட்

ஸ்விக்கி மற்றும் பிரீசார்ஜ் ஆகிய பிரபல நிறுவனங்களுக்கு பேஸ்லைன் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. காரணம், இரண்டு நிறுவனங்களும் ப்ரித்வி ஷா அடித்த சதத்தை வாழ்த்தும் சாக்கில் விளம்பரம் செய்துள்ளன. ஸ்விக்கி நிறுவனம் தன் ட்வீட்டில் "சில முதல் விஷயங்களை நாம் எப்போதும் நினைவு வைத்திருப்போம் - முதலில் சாப்பிட்ட ரசமலாய் மற்றும் ப்ரித்வி ஷா அடித்த முதல் சதம்" என குறிப்பிட்டு இருந்தது.

ஒரு கோடி கொடுங்க

ஒரு கோடி கொடுங்க

வாழ்த்துவதில் சிக்கல் இல்லை. ஆனால், இது போல தங்கள் நிறுவனங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்வது சரியல்ல என்று கூறி சுமார் ஒரு கோடி கேட்டு இரண்டு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு நிறுவனங்களும் தங்கள் ட்வீட்களை நீக்கிவிட்டன.

அதுக்குள்ள இப்படியா?

அதுக்குள்ள இப்படியா?

ப்ரித்வி ஷா தன் முதல் போட்டியில் மட்டுமே ஆடி முடித்துள்ளார். அதற்குள் அவரை வைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை துவங்கி உள்ளன. இங்கே திறமை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர் சதம் அடித்தால், டிரென்டிங்கில் இருந்தால் அவரை வைத்து விளம்பரம் தேடலாம். இதுதான் நோக்கமாக உள்ளது. காசு கொடுத்து விட்டு விளம்பரம் செய்தால் அந்த வீரருக்காவது பயன்படும்.

Story first published: Friday, April 17, 2020, 21:34 [IST]
Other articles published on Apr 17, 2020
English summary
Prithvi Shaw manager sent legal notice to Swiggy and Freecharge for advertisement
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X