For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காதலோட மெசேஜ் பகிர்ந்த பிரித்வியின் காதலி... வைரலான இன்ஸ்டாகிராம் பதிவு

அகமதாபாத் : ஐபிஎல்லின் நேற்றைய போட்டியில் கேகேஆர் அணியுடன் மோதிய டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் 82 ரன்களை அடித்திருந்தார் டெல்லி வீரர் பிரித்வி ஷா.

மனமுடைந்த ஆஸ்திரேலிய வீரர்.. ஆர்சிபி கடந்த சீசனில் சொதப்பியதற்கு காரணம்.. பகிரங்கமாக பழிபோட்ட கோச்! மனமுடைந்த ஆஸ்திரேலிய வீரர்.. ஆர்சிபி கடந்த சீசனில் சொதப்பியதற்கு காரணம்.. பகிரங்கமாக பழிபோட்ட கோச்!

இந்நிலையில் அவரது காதலி என கூறப்படும் நடிகை ப்ராச்சி சிங் பிரித்வியை பாராட்டி போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகியுள்ளது.

டெல்லி சிறப்பான வெற்றி

டெல்லி சிறப்பான வெற்றி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் கேகேஆர் மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்மூலம் அந்த அணியின் தன்னம்பிக்கை மேலும் பலப்பட்டுள்ளது.

பிரித்வி அதிரடி

பிரித்வி அதிரடி

இந்த போட்டியில் சிறப்பான பேட்டிங்கை தந்துள்ளார் டெல்லி வீரர் பிரித்வி ஷா. 41 பந்துகளில் 82 ரன்களை அவர் குவித்துள்ளார். இதையடுத்து போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் அவர் பெறும் இரண்டாவது ஆட்ட நாயகன் விருது இது.

இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராம் பதிவு

இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இவையெல்லாம் அவருக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்குமா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் அவரது காதலியாக கூறப்படும் ப்ராச்சி சிங் அவரை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

புதிய சூட்கேஸ் தேவை

புதிய சூட்கேஸ் தேவை

முதலில் அவர் போட்ட பதிவு, போட்டிக்கு பிறகு பிரித்வி ஷா செய்தியாளர்களிடம் பேசியது. இரண்டாவதாக பிரித்வி பெற்ற விருதுகளின் கொலாஜை ப்ராச்சி பகிர்ந்துள்ளார். முதல் பதிவில் ப்ரித்வியை நினைத்து தான் பெருமை கொள்வதாகவும் இரண்டாவது பதிவில் விருதுகளை பேக் செய்ய புதிய சூட்கேசை வாங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காதலுக்கு சாட்சி

காதலுக்கு சாட்சி

இந்த பதிவுகள் இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகியுள்ளன. இவர்கள் இருவர் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட எந்த தகவலும் இல்லை என்றாலும் தொடர்ந்து இவர்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ப்ராச்சி போட்டுள்ள பதிவு அவர்களது காதலை ரசிகர்கள் உறுதிப்படுத்த காரணமாக அமைந்துள்ளது.

Story first published: Friday, April 30, 2021, 19:34 [IST]
Other articles published on Apr 30, 2021
English summary
Prachi took to Instagram after the match and posted a story featuring Prithvi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X