For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காஷ்மீர் சென்ற டோணிக்கு பகிரங்கமாக அவமரியாதை! ஷாக்கிங் வீடியோ

By Veera Kumar

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இந்திய கிரிக்கெட் வீரர் டோணிக்கு அவமரியாதை அளிக்கும் செயல் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டோணி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் தற்போது ஓய்வில் உள்ளார்.

டோணிக்கு ராணுவ கவுர லெப்டினண்ட் ஜெனரல் பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக டோணி, கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

உற்சாகமூட்டிய டோணி

உற்சாகமூட்டிய டோணி

காஷ்மீரில் உள்ள ராணுவ பள்ளிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்ற டோணி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். இது காஷ்மீரிலுள்ள ராணுவத்தினருக்கும், ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.

சிறப்பு விருந்தினர்

சிறப்பு விருந்தினர்

இதேபோல காஷ்மீர் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள குன்சார் பகுதியில் ராணுவம் நடத்திய கிரிக்கெட் போட்டி ஒன்றில் டோணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிரிக்கெட் போட்டியை காண டோணி வருகை தந்த போது, மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் சிலர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்ரிடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.

அப்ரிடியை புகழ்ந்த காஷ்மீர்வாசிகள்

அப்ரிடியை புகழ்ந்த காஷ்மீர்வாசிகள்

அப்ரிடிக்கான அடை மொழி பூம்பூம் என்பதாகும். டோணி வருகையின்போது அவருக்கு கேட்க வேண்டும் என்பதற்காக, "பூம்பூம் அப்ரிடி" என மைதானத்தில் இருந்தவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினர். இதை கவனித்த பாதுகாப்பு படையினர், அப்ரிடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்களை கட்டுப்படுத்த முயன்றபோதும் முடியவில்லை.

டோணியை மட்டம் தட்டுவதா?

இதனால் டோணிக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்தியா கோப்பையை வென்று வெற்றிக்கொடி கட்ட உறுதுணையாக இருந்த டோணியை, சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதாக சாதிக்காத அப்ரிடியைவிட மட்டம் தட்டுவதாக அமைந்திருந்தது இந்த கோஷம். இருப்பினும் 'கேப்டன் கூல்' அப்செட் ஆகவில்லை. சிரித்தபடியே அதை கடந்து சென்றார்.

அதெல்லாம் அரசு பார்த்துக்கொள்ளும்

அதெல்லாம் அரசு பார்த்துக்கொள்ளும்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருநாட்டு கிரிக்கெட் தொடர் அவசியமா என்ற நிருபர்கள் கேள்விக்கு, இரு நாடுகள் நடுவேயான கிரிக்கெட் போட்டிக்கு தடை விதித்திருப்பது விளையாட்டுடன் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இரு நாட்டு அணிகளும் ஆடும்போது அதனால் நிறைய வருமானம் கிடைக்கும். இதையெல்லாம் மனதில் வைத்துதான் இந்திய அரசு, கிரிக்கெட் ஆடுவதற்கு தடையை நீடித்து வருவதாக உணர்கிறேன். எனவே அரசு எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றார் டோணி.

Story first published: Wednesday, November 29, 2017, 14:30 [IST]
Other articles published on Nov 29, 2017
English summary
Locals chanted 'Boom Boom Afridi' slogans as Former India Skipper Mahendra Singh Dhoni, on Sunday visited Kunzar area of Baramulla District in Kashmir.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X