அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு

பாகிஸ்தான்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இந்நிலையில் வீரர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொடரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடர்

டி20 தொடர்

பாகிஸ்தான் ப்ரீமியர் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த 20ம் தேதி தொடங்கியது. மொத்தமுள்ள 34 போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதல் 20 ஆட்டங்கள் கராச்சியிலும், மீதமுள்ள 10 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 ப்ளே ஆட்டங்களும் லாகூரில் நடத்துவதாக இருந்தது.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முதன் முதலில் லாகூர் அணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அடுத்துடுத்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. இதுவரை மொத்தம் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேர் வீரர்களும் ஒருவர் பயிற்சியாளரும் ஆவர். அவர்களின் விவரங்கள் வெளியாகவில்லை.

ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிஎஸ்எல் கவுன்சில் அவர ஆலோசனை மேற்கொண்டது. அதில் நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மீதமுள்ள அனைத்து போட்டிகளையும் ஒத்திவைப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் தொடங்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் இணையத்தில் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் சிறப்பான ஒன்று தெரிவித்த தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயினை இந்திய ரசிகர்கள் இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
PSL postponed after three new Covid-19 cases reported
Story first published: Thursday, March 4, 2021, 18:42 [IST]
Other articles published on Mar 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X