For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காய்ச்சல் இருந்தா என்ன... சிங்கம் சிங்கம் தான்... "ஹாப்" அடித்து நிரூபித்த புஜாரா!

ராஜ்காட் : சௌராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையில் ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டி ராஜ்காட்டில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

காய்ச்சல் காரணமாக முதல் நாளில் விளையாடிய சத்தீஸ்வர் புஜாரா 5 ரன்களில் வெளியேறிய நிலையில், இரண்டாவது நாளான நேற்று அவரது ஆட்டம் பட்டையை கிளப்பியது. அவர் 66 ரன்களை குவித்தார்.

Pujara and Arpit Vasavada gave a masterclass in defensive batting

அவருக்கு இணையாக ஆடிய சௌராஷ்டிர அணி வீரர் அர்பித் வசாவதா, சதமடித்து அணியின் ஸ்கோரை 384க்கு உயர்த்தினார்.

ரஞ்சிக் கோப்பையின் இறுதிப்போட்டி ராஜ்காட்டில் நடைபெற்று வரும்நிலையில், இதில் சௌராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி முதல் நாளில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை அடித்திருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் விளையாடிவிட்டு நேரடியாக இந்தப் போட்டியில் விளையாடிய சத்தீஸ்வர் புஜாரா, முதல் நாளில் விளையாடிய போது, காய்ச்சல் காரணமாக 5 ரன்கள் மட்டுமே அடித்து இடையிலேயே விலகினார்.

சௌராஷ்டிரா அணிக்கு தூண் போன்றவர் புஜாரா என்று தெரிவித்திருந்த அந்த அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனாத்கட், இரண்டாவது நாளில் அவர் விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதற்கேற்றாற்போல, இரண்டாவது நாளில் விளையாடியா புஜாரா 66 ரன்களை குவித்தார். அவருக்கு ஈடுகொடுத்து விளையாடிய அர்பித் வசாவதா, சதமடித்து தன்னுடைய அணியின் ஸ்கோரை 384க்கு உயர்த்தினார். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட்டுகளை அந்த அணி இழந்துள்ளது.

இவர்கள் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 142 ரன்களை குவித்தனர். இதையடுத்து சௌராஷ்டிரா அணி இந்த இறுதிப்போட்டியில் மிகவும் வலிமையாக உள்ளது. புஜாரா நிதானமாக விளையாடி 237 பந்துகளில் 66 ரன்களை குவிக்க, வசாவதா 287 பந்துகளில் 106 ரன்களை அடித்திருந்தார். இரண்டாவது நாளில் சௌராஷ்டிர அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை குவித்திருந்தது. வசாவதா 11 பவுண்டரிகளை அடித்திருந்தார். உள்ளூர் போட்டிகளில் இது அவரது 8வது சதமாகும்.

சௌராஷ்டிராவின் பேட்டிங்கில் எதிரணி வீரர்கள், பந்துவீசியே சோர்ந்து போனார்கள். ஆயினும் பெங்கால் அணியின் பந்துவீச்சாளர்கள் முகேஷ் குமார் புஜாராவையும் பிரேராக் மான்காத்தையும் வெளியேற்றினார். இதேபோல ஷாபாஸ் அகமது வசாவதாவை பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார்.

Recommended Video

Ind vs SA 1st ODI | SA With India Tour After Corona Risk | Chahal wears face mask

பெங்கால் அணியின் பயிற்சியாளர் அருண் லால், ராஜ்காட் மைதானத்தின் பிட்ச் மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் புஜாரா மற்றும் வசாவதா பட்டையை கிளப்பியிருந்தனர்.

Story first published: Wednesday, March 11, 2020, 16:01 [IST]
Other articles published on Mar 11, 2020
English summary
Pujara and Vasavada stitched a 142-run stand as Saurashtra claimed a strong position
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X