For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரேங்கிங்... சரிந்து போன அஸ்வின், புஜாரா...ஆனாலும் டாப் 10க்குள்!

துபாய்: சொதப்பலாக பந்து வீசி வரும் ஆர். அஸ்வின், பேட்டிங்கில் முழு வீச்சைக் காட்டத் தவறி சட்டேஸ்வர் புஜாரா ஆகிய இருவரும் ஐசிசியின் டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் கீழே இறங்கியுள்ளனர்.

அதேசமம், இந்த இருவர் மட்டுமே டாப் 10 வரிசைக்குள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது மற்ற இந்திய வீரர்கள் இவர்களை விட மோசமாக உள்ளனர்.

பந்து வீச்சில், அஸ்வின் 6வது இடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்பு ஒரு இந்திய வீரர் கூட இல்லை. புஜாரா, பேட்டிங்கில் 8வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு முன்பும் எந்த இந்தியரும் இல்லை.

எல்லாத்துக்கும் காரணம் 'கிவி'தான்...

எல்லாத்துக்கும் காரணம் 'கிவி'தான்...

நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியுற்றதன் காரணமாகவே இந்த சரிவை இரு வீரர்களும் சந்தித்தனர்.

கோஹ்லிக்கு 11

கோஹ்லிக்கு 11

இந்திய வீரர்களில் பேட்டிங் வரிசையில் கோஹ்லி 11வது இடத்தில் இருக்கிறார்.

டோணிக்கு 33

டோணிக்கு 33

33வது இடத்தில்தான் கேப்டன் டோணி வருகிறார். அதாவது டோணி 5 இடங்கள் சறுக்கி இ்ந்த இடத்துக்குப் போயுள்ளார்.

தம்பி ரோஹித்து பரவாயில்லை

தம்பி ரோஹித்து பரவாயில்லை

ரோஹித் சர்மா பரவாயில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் சதம் போட்ட அவர் 6 இடங்கள் முன்னேறி 36வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஓஜாவுக்கு 11

ஓஜாவுக்கு 11

பந்து வீச்சாளர்களில் அஸ்வினுக்கு அடுத்து ரேங்கிங்கில் வரும் வீரர் பிரக்யான் ஓஜா. அவருக்கு கிடைத்துள்ள இடம் 11. இவரும் 2 இடம் சறுக்கியுள்ளார்.

ஜாகிர்கான் அப்படியே.. அதே இடத்தில்

ஜாகிர்கான் அப்படியே.. அதே இடத்தில்

ஜாகிர்கான் அப்படியே அதே இடத்தில் அதாவது 22வது இடத்தில் இருக்கிறார். மேலேயும் போகவில்லை, கீழேயும் இறங்கவில்லை.

Story first published: Monday, February 10, 2014, 13:24 [IST]
Other articles published on Feb 10, 2014
English summary
Cheteshwar Pujara and R Ashwin managed to remain the best-placed Indians by keeping their place inside the top-10 of the batting and bowling charts respectively but slipped a rung each in the latest ICC rankings issued on Monday. Pujara was placed sixth in the batting list while Ashwin was eighth among the bowlers after the opening Test against New Zealand which India lost by 40 runs yesterday. Among other Indians, Virat Kohli remained steady at 11th in the batting rankings followed by Mahendra Singh Dhoni at the 33rd spot, a loss of five positions for the skipper.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X