For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினே இந்த சாதனையை செய்ததில்லை..... ஆனால் புஜாரா செய்யலாம்... நிகழ்த்தி காட்டுவாரா 4வது டெஸ்டில்

அகமதாபாத்: 4வது டெஸ்டில் கவாஸ்கர், விஸ்வநாத், சச்சின் உள்ளிட்டோரின் சாதனை பட்டியலில் இணைய புஜாரவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் வரும் மார்ச் 4ம் தேதி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வரும் நிலையில் பேட்டிங்கில் மிகப்பெரும் சாதனை பட்டியலில் இடம் பெற புஜாராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

டெஸ்ட் வீரர்

டெஸ்ட் வீரர்

இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக இருந்து வருபவர் சட்டீஸ்வர் புஜாரா. இவர் இங்கிலாந்துடனான தொடரில் அவ்வளவு பெரிதாக சோபிக்க வில்லை. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அவர் அடித்துள்ளார். அவரின் ஸ்கோர் முறையே, 73, 15, 21, 7, 0 ஆகும். இது பலருக்கும் ஏமாற்றம் அளித்தது.

புதிய சாதனை

புதிய சாதனை

4வது டெஸ்டில் புஜாரா இன்னும் 45 ரன்கள் அடித்தால் உள்நாட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இவர் தற்போதுவரை 955 ரன்களை அடித்துள்ளர். இதற்கு முன்னர், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், விஸ்வநாத் ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர். கடந்த போட்டியில் கோலியும் இந்த பட்டியலில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினே இல்லை

சச்சினே இல்லை

இந்த பட்டியலில் கவாஸ்கர் 1331 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக விஸ்வநாத் 1022 ரன்களுடன் உள்ளார். 3வது இடத்தில் 1015 ரன்களுடன் விராட் கோலி உள்ளார். இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் கூட இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல அடுத்த போட்டியில் புஜாரா 45 ரன்களை எடுத்தா இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெறுவார். அவர் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார்.

சாதிப்பாரா புஜாரா

சாதிப்பாரா புஜாரா

புஜாரா இந்திய அணிக்காக சதமடித்து நீண்ட நாட்கள் ஆகின்றன. கடைசியாக 2019ம் ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவுடன் 193 ரன்களை அடித்துள்ளார். அதன் பிறகு இவர் விளையாடிய 19 போட்டிகளில் ஒன்றில் கூட இவர் சதமடிக்கவில்லை. இதனால் அடுத்த போட்டியிலாவது சதமடித்து தனது ஃபாமை நிரூபிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Tuesday, March 2, 2021, 17:59 [IST]
Other articles published on Mar 2, 2021
English summary
Pujara can to another achievement, can join Gavaskar, Viswanath, Kohli in elite list
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X