For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்போங்க செஞ்சூரி அடிப்பீங்க..? செய்தியாளரின் கேள்விக்கு கடுப்பான புஜாரா..!!

கான்பூர் ; இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது

இதற்காக இரு அணி வீரர்களும், கான்பூரில் மையமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உலக டெஸ்ட் தொடர் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்திடம் இந்தியா பறிக்கொடுத்தது. அதனால் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!

மூத்த வீரர்கள் விலகியுள்ள நிலையில், ரஹானே தற்காலிக கேப்டனாக செயல்படுகிறார். ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் டெஸ்ட் சீனியர்களான புஜாரா, ரஹானே உள்ளனர்

சதம் வரட்சி

சதம் வரட்சி

33வயதான புஜாரா இதுவரை 90 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6494 ரன்களை விளாசியுள்ளார். இதில் 18 சதங்கள் அடங்கும்.ஆனால் புஜாரா கடைசியாக 2019 ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசினார். அதன் பின் 38 இன்னிங்சாக புஜாரா சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார். புஜாரா அதிகளவில் பந்துகளை எதிர்நோக்கி வெறும் 20, 30 ரன்களில் ஆட்டமிழப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இதே போன்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் புஜாரா செயல்பட்டாலும், அடுத்த 2 டெஸ்ட்களில் அரைசதம் விளாசினார். இதனிடையே, நியூசிலாந்துக்கு எதிரான தொடர் குறித்து செய்தியாளர்கள் புஜாராவிடம் சதம் அடிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியை கேட்டதும், சற்று கடுப்பான புஜாரா பின்னர் அமைதியாக பதில் அளித்தார்

கண்டிப்பாக வரும்

கண்டிப்பாக வரும்

சமீப காலமாக அரைசதம் கடந்து ஆட்டமிழந்து வருகிறேன். எப்போதும் போல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். சதம் அடிக்கவில்லை என்று எனக்கும் தெரியும், ஆனால் அதை பற்றி கவலைப்படவில்லை. அணியின் ஸ்கோரை உயர்த்துவதிலேயே என் கவனம் இருக்கும். அப்படி விளையாடினால் கண்டிப்பாக சதமும் அடிக்க வாய்ப்பு உள்ளது என்று புஜாரா பதில் அளித்தார்.

அழுத்தம்

அழுத்தம்

மேலும் பேசிய புஜாரா, எனது டெக்னிக்கில் எந்த மாற்றமும் செய்ய வில்லை. ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். சதம் அடிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தால், அது நமது பேட்டிங் திறனை பாதிக்கும். கொஞ்சம் பயமின்றி இங்கிலாந்தில் விளையாடினேன்.அதே போன்ற மனநிலையில் தான் இந்த தொடரிலும் உள்ளேன் என்று கூறினார். தற்போது இந்திய அணியின் சிறந்த வீரரான டிராவிட் பயிற்சியாளராக உள்ளதால் புஜாரா, ரஹானேவுக்கு அவர் பக்க பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, November 23, 2021, 18:59 [IST]
Other articles published on Nov 23, 2021
English summary
Pujara opens about his century Drought ahead of NZ series. Pujara confident on his batting form and says century is around the corner
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X