For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புஜாரா.. இப்ப அவுட் ஆகலைன்னா, நாங்க வீல்சேர் கேட்க வேண்டி இருக்கும்!

Recommended Video

புஜாராவை சீண்டிய ஆஸ்திரேலிய வீரர்- வீடியோ

மும்பை : இந்திய டெஸ்ட் வீரர் புஜாரா ஆஸ்திரேலியர்கள் தன்னை ஸ்லெட்ஜிங் செய்தது குறித்து பல விஷயங்களை சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக, இதுவரை வெளிவராத ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்தும் கூறினார் புஜாரா. அது தான் ஆஸ்திரேலியர்களின் ஸ்லெட்ஜிங்-களிலேயே சிறந்தது எனவும் கூறினார்.

பொறுமையாக ஆடும் புஜாரா

பொறுமையாக ஆடும் புஜாரா

புஜாரா மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேன். ரன்களை பற்றிக் கவலைப்படாமல் கட்டை போட்டு பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றி விடுவார். புஜாராவை இந்த காரணத்துக்காகவே ஆஸ்திரேலிய வீரர்கள் பல முறை ஸ்லெட்ஜிங் செய்துள்ளார்கள்.

போர் அடிக்கலையா?

போர் அடிக்கலையா?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நீண்ட நேரம் பேட்டிங் செய்து வந்த புஜாராவிடம், ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் "போர் அடிக்கலையா?" என கேட்டது மட்டுமே அப்போது பேசப்பட்டது.

ஆல்-அவுட் ஆகி விடும்

ஆல்-அவுட் ஆகி விடும்

புஜாரா கூறுகையில், இது தவிர ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த தொடரில் பல முறை தன்னை சீண்ட முயற்சித்ததாக கூறினார். முதல் டெஸ்டில் இந்தியா 40 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்த நிலையில் இருந்தது. அப்போது, போட்டி முடிந்தது என்றே நினைத்தார்கள். இந்தியா 150-160 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி விடும் என்று நினைத்தார்கள் என குறிப்பிட்டார் புஜாரா.

நடந்தது வேறு

நடந்தது வேறு

ஆனால், முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. புஜாரா அந்த டெஸ்டில் சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் புஜாரா மூன்று சதங்கள் அடித்தார். இந்த தொடரை விட சிறந்த ஸ்லெட்ஜிங் 2017இல் ராஞ்சி டெஸ்ட்டில் நடந்துள்ளது.

வீல்சேர் கேட்போம்

வீல்சேர் கேட்போம்

அந்த டெஸ்ட் போட்டி குறித்து புஜாரா கூறுகையில், தான் 170+ ரன்களில் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது ஒரு ஆஸ்திரேலிய வீரர் அருகே வந்து "நீ இப்ப அவுட் ஆகலைன்னா, நாங்க வீல்சேர் கேட்க வேண்டி இருக்கும்" என கூறினார், என்றார்.

Story first published: Wednesday, February 13, 2019, 19:02 [IST]
Other articles published on Feb 13, 2019
English summary
Pujara shared a funny sledging incident by an australian player
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X