For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்களுக்கு மட்டும் சாதகமா... யாரை கேட்டு முடிவு செய்தீர்கள்... பிசிசிஐ மீது பஞ்சாப் அணி அதிருப்தி

சென்னை: பஞ்சாப் அணி சிறந்த வீரர்களை கையில் வைத்திருந்தாலும் இந்த ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2021 ஐபிஎல் தொடர் நடக்க இடங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பாவம்.. மனுஷன் உயிரை கொடுத்து விளையாடுகிறார்.. 7 வருடங்களுக்கு பின் ஸ்ரீசாந்த் செய்த சாதனை.. செம பாவம்.. மனுஷன் உயிரை கொடுத்து விளையாடுகிறார்.. 7 வருடங்களுக்கு பின் ஸ்ரீசாந்த் செய்த சாதனை.. செம

முதலில் ஐபிஎல் தொடர் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய 3 மைதானங்களில் மட்டும் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் 5 இடங்களாக மாற்றப்பட்டுள்ளது.

கவுன்சில் முடிவு

கவுன்சில் முடிவு

மாநில தேர்தல்கள் மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரை மிகுந்த பாதுகாப்புடன் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதன்படி குறிப்பிட்ட அளவான பார்வையாளர்களுடன் குறைந்த அளவிலான மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறவுள்ளது.

 எங்கு நடக்கிறது

எங்கு நடக்கிறது

நடைபெற்று முடிந்த ஆலோசனை கூட்டத்தில் மும்பையில் அனைத்து போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் ஐபிஎல் போட்டிகள் சென்னை, அகமதாபாத், டெல்லி, பெங்களூரு மைதானங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத் மோதிரா மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மும்பை கேள்விக்குறி

மும்பை கேள்விக்குறி

மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் அங்கு மீண்டும் லாக்டவுன் கொண்டு வரும் எண்ணத்தில் அரசு உள்ளதால் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி கிடைப்பதில் சந்தேகம் நிலவுகிறது. எனினும் மும்பை அணி கொடுத்த அழுத்தம் காரணமாக மும்பையிலும் ஆட்டம் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அணிகளுக்கு சிக்கல்

அணிகளுக்கு சிக்கல்

இந்த முறை குறைவான மைதானங்களே தேர்வு செய்யப்பட்டுள்ளதால், ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் தங்கள் ஹோம் மைதானத்தை இழக்கிறது. இது அந்த அணிகளுக்கு பெரிய பின்னடைவை கொடுக்கும் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த அணிகள் எங்கு ஆடும் என்பது உறுதியாகவில்லை.

ஆத்திரத்தில் பஞ்சாப்

ஆத்திரத்தில் பஞ்சாப்

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி CEO சதீஷ் மேனன், பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அணிகள் தங்களது ஹோம் மைதானத்தில் பலமாக விளையாடும். 5 அல்லது 6 போட்டிகளை ஹோம் மைதானத்தில் வென்றால் மீதியை வெளி மைதானங்களில் வெல்லக்கூடும். இதனால் பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகள் பாதிக்கப்படும் என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 2, 2021, 13:30 [IST]
Other articles published on Mar 2, 2021
English summary
Punjab Kings unhappy with BCCI after the board didn't list Punjab as one of the venues
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X