For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5 முறை தொடர் வெற்றி... இன்னைக்கி 6வது வெற்றி அடைஞ்சுட்டா சூப்பரப்பு... காத்திருக்கும் பஞ்சாப்

கடந்த 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை பெற்றுவரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்துவதன்மூலம் 6வது வெற்றியை சுவைக்க முடியும்.

அதேபோல, இந்த போட்டி இரு அணிகளுக்கும் பிளே-ஆப் செல்வதற்கான திறவுகோலாக அமையவுள்ளதால் இன்றைய போட்டி மிகவும் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே செய்த காரியம்.. மொத்த பிளே-ஆஃப்பும் மாறியது.. எஸ்கேப் ஆன ராஜஸ்தான்!சிஎஸ்கே செய்த காரியம்.. மொத்த பிளே-ஆஃப்பும் மாறியது.. எஸ்கேப் ஆன ராஜஸ்தான்!

சிறப்பான பஞ்சாப் அணி

சிறப்பான பஞ்சாப் அணி

ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் மிகவும் மெதுவாகவே தனது போட்டிகளை துவங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. தன்னுடைய முதல் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அது வெற்றி பெற முடிந்தது. ஆனால் அதன்பிறகு அமைந்ததெல்லாம் அந்த அணியின் வெற்றி கணக்கில் மட்டுமே சேர்ந்தது. அடுத்தடுத்து 5 வெற்றிகளை பெற்றுள்ளது அந்த அணி.

ராஜஸ்தான் -பஞ்சாப் மோதல்

ராஜஸ்தான் -பஞ்சாப் மோதல்

இந்நிலையில் இன்றைய 50வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பஞ்சாப் அணி மோதவுள்ளது. அபுதாயில் நடைபெறவுள்ள இந்த போட்டி பிளே-ஆப் கனவில் உள்ள அந்த இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

ரூ.10.75 கோடிக்கு ஏலம்

ரூ.10.75 கோடிக்கு ஏலம்

பஞ்சாப் அணியின் கிளென் மாக்ஸ்வெல் அந்த அணியால் 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நிலையில், அவர் இதுவரை விளையாடியுள்ள 120 பந்துகளில் ஒரு சிக்ஸரைகூட அடிக்காதது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது அணியின் பேட்டிங் கோச் வாசிம் ஜாபரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

கேள்விக்குள்ளான மயங்க் பிட்னஸ்

கேள்விக்குள்ளான மயங்க் பிட்னஸ்

மேலும் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள கிறிஸ் கெயில் போட்டிகளில் பங்கேற்றது முதல் அந்த அணிக்கு வெற்றி முகம் ஆரம்பிக்க துவங்கியுள்ளது. ஆனால் அணியின் மயங்க் அகர்வால் பிட்னசும் கேள்விக்குறியாகியுள்ளது. அவருக்கு பதிலாக மன்தீப் சிங் சிறப்பான துவக்க வீரராக அமைந்துள்ளார். மேலும் அணியின் ஷமி, ஜோர்டன் மற்றும் அர்ஷ்தப் சிங் ஆகியோர் சிறப்பான பௌலிங் அணியாக அமைந்துள்ளனர்.

பௌலிங் சவால்

பௌலிங் சவால்

இந்நிலையில், ராயல்ஸ் அணியின் மிகப்பெரிய சவாலாக பௌலிங் காணப்படுகிறது. அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படும்நிலையிலும் ஜெய்தேவ் உனாத்கட், அங்கித் ராஜ்புத் மற்றும் கார்த்திக் தியாகி போன்றவர்கள் நிலையான பௌலிங்கை வெளிப்படுத்த தவறி வருகின்றனர்.

வெற்றியை தந்த சதம்

வெற்றியை தந்த சதம்

தற்போது அணியின் பேட்டிங்கை பலப்படுத்த அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கியுள்ளார். கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அவரது சதம் அணியின் வெற்றியை உறுதிப்படுத்திய நிலையில், அவர் தொடர்ந்து இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, அவர் இன்னும் தன்னுடைய பௌலிங் அட்டாக்கையும் துவங்கவில்லை.

Story first published: Friday, October 30, 2020, 12:50 [IST]
Other articles published on Oct 30, 2020
English summary
Royals' camp must be relieved with Ben Stokes hitting form
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X