For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக பேட்மின்டனில் பி.வி. சிந்து அபாரம்..! இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..! தங்கம் வெல்வாரா?

பேசல்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து.

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் உலக பேட்மின்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியின் அரையிறுதிச் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. உலகின் 3ம் நிலை வீராங்கனை சீனாவின் சென் யுபெய்யுடன் மோதினார் 5ம் நிலை வீராங்கனையான பி.வி. சிந்து.

முக்கிய போட்டி என்பதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். அரையிறுதியில் சிந்து, சீனாவின் சென் யு பெய்யை எதிர்கொண்டு ஆடினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கினார் சிந்து.

அவரது ஆக்ரோஷ ஆட்டம் நல்ல பலனை கொடுத்தது. முதல் செட்டை 21க்கு 7 என்ற புள்ளி கணக்கில் அதிரடியாக கைப்பற்றினார். 2வது ஆட்டத்திலும் அனல் பறந்தது. எப்படியாவது 2வது செட்டில் வென்றுவிட வேண்டும் என்று சென் யு பெய் போராடினார்.

ஆனால், சிந்து தமது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தினார். முடிவில் 21க்கு 14 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 21க்கு 7, 21க்கு 14 என்ற நேர் செட்டுகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஏற்கெனவே 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார் 24 வயது சிந்து. இப்போது முதல் முறையாக தங்கம் வெல்லும் வந்துள்ளது. எனவே, இந்த ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பதக்கம் உறுதி

பதக்கம் உறுதி

24 வயதான சிந்து இதன் மூலம் உலக சாம்பியன் போட்டியில் தனது 5வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஏற்கெனவே 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார். உலக சாம்பியன் போட்டியில் 5 பதக்கங்களை வென்றதின் மூலம் சங் நிங்கின் சாதனையை சமன் செய்வார் சிந்து.

சபாஷ் பிரணீத்

சபாஷ் பிரணீத்

ஆடவர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் 24-22, 21-14 என்ற புள்ளி கணக்கில் ஆசிய சாம்பியன் இந்தோனேஷியாவின் ஜோனத்தான் கிறிஸ்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1983 உலக கோப்பை போட்டியில் பிரகாஷ் படுகோன் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தார்.

36 ஆண்டுகள் ஆனது

36 ஆண்டுகள் ஆனது

அதன்பிறகு 36 ஆண்டுகள் கழித்து அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தையும் உறுதி செய்திருக்கிறார் பிரணீத். மற்றொரு காலிறுதியில் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெவால் 21-15, 25-27, 12-21 என்ற கணக்கில் டென் மார்க்கின் மியாவிடம் தோற்றார். 1 மணி நேரம் 12 நிமிடங்கள் இந்த போட்டி நடைபெற்றது.

நடுவர் மீது புகார்

நடுவர் மீது புகார்

காலிறுதியில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாக அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். சாய்னாவுக்கு வர வேண்டிய 2 புள்ளிகளை ரத்து செய்தார் என்பது அவரது கணவரான காஷ்யப்பின் குற்றச்சாட்டாகும். சாய்னா ஆடிய மைதானத்தில் நேரடி ஒளிபரப்பு இல்லாததால், முறையீடு செய்ய வாய்ப்பு இல்லாமல் போனது.

Story first published: Saturday, August 24, 2019, 19:51 [IST]
Other articles published on Aug 24, 2019
English summary
Pv sindhu enters in to world badminton championship semi-final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X