முடிவுக்கு வந்த அக்னிநட்சத்திர மோதல்... இணைந்த இரு துருவங்கள்... மீண்டும் தொடரும் நட்பு!

டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடர்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் இணக்கத்தை பார்க்க முடிந்தது.

ஒரு போட்டியில் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் ரன்களை குவித்தனர். அதிலும் ஒருவருக்கொருவர் சிறப்பாக விட்டுக் கொடுத்து விளையாடியதை ரசிகர்கள் பார்த்தனர்.

இந்நிலையில் தொடர்ந்த குவாரன்டைன் தனிமை மற்றும் கோச் ரவி சாஸ்திரியின் வழிகாட்டுதலால் இருவரும் இணக்கமாகியுள்ளதாக இந்திய அணியில் கூறப்பட்டுள்ளது.

பெரிய மாற்றம்

பெரிய மாற்றம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 தொடர்கள் அடுத்தடுத்து நடந்து முடிந்துள்ளன. இந்த தொடர்களில் இந்தியா அபார வெற்றி பெற்று கோப்பைகளை கைப்பற்றியது. அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பான ஒருங்கிணைப்போடு போட்டிகளை அணுகினர். குறிப்பாக இந்திய அணியில் மற்றுமொரு பெரிய மாற்றமும் நிகழ்ந்தது.

இணைக்கமான சூழல்

இணைக்கமான சூழல்

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையில் கடந்த வருடங்களில் இணக்கமான சூழல் நிலவவில்லை. இதன் பாதிப்பு அணியிலும் எதிரொலித்தது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களுக்கு அணியில் இடம்கிடைக்காத சூழலும் காணப்பட்டது. இதற்கு காரணமாக விராட் கோலி சுட்டிக் காட்டப்பட்டார்

சாஸ்திரி அறிவுறுத்தல்

சாஸ்திரி அறிவுறுத்தல்

இந்நிலையில் தற்போது தொடர்ந்த குவாரன்டைன் தனிமை மற்றும் தலைமை கோச் ரவி சாஸ்திரியின் அறிவுறுத்தல்களை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையில் இணக்கமான சூழல் காணப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த போட்டிகளில் இது எதிரொலித்தது. இருவரும் கடந்த தொடரின் ஒரு போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கி சூப்பர் பார்ட்னர்ஷிப்பை அமைத்து ரன்களை குவித்தனர். அவர்களின் புரிதல் சிறப்பாக அமைந்திருந்தது.

அதிகமான புகைப்படங்கள்

அதிகமான புகைப்படங்கள்

விராட் இல்லாத நேரங்களில் அது சிறிது நேரமாக இருந்தாலும் ரோகித் சர்மா அணியை வழிநடத்தியதையும் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பார்க்க முடிந்தது. கடந்த வருடங்களில் இவர்கள் இருவரும் இணைந்து இருந்த புகைப்படங்கள் வெளிவராத நிலையில், சமீப காலங்களில் இருவரையும் அதிகமான புகைப்படங்களில் இணைந்து பார்க்க முடிந்தது.

நட்பை புதுப்பித்த வீரர்கள்

நட்பை புதுப்பித்த வீரர்கள்

இது இந்திய அணிக்கு ஆரோக்கியமாக பார்க்கப்படுகிறது. இருவரும் இணைந்து தங்களிடைய நட்பை புதுப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தங்களைப் பற்றி தங்களின் செயல்பாடுகளை பற்றி மற்றவர்கள் பேசுவதற்கு இடம்கொடுக்காமல், தாங்களே உட்கார்ந்து பேசி தங்களது நட்பை மீண்டும் துவக்கியுள்ளனர். இருவரின் பங்களிப்புமே அணிக்கு மிகவும் முக்கியம் என்பதை இருவருமே தற்போது உணர்ந்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Both understand that neither of the two is any less important in the team
Story first published: Tuesday, March 30, 2021, 11:57 [IST]
Other articles published on Mar 30, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X