For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாதனை மேல் சாதனை... அதிரடி கிளப்பும் தமிழக வீரர்... ஷாகிர் கானை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ரவி அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 4வது வீரர் என்ற பெருமை ரவி அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.

கோபமாக கெட்டவார்த்தையில் கத்திய கோலி.. பச்சை மண்ணு.. அவரை போய் இப்படி நடத்தலாமா?.. பெரும் சர்ச்சை கோபமாக கெட்டவார்த்தையில் கத்திய கோலி.. பச்சை மண்ணு.. அவரை போய் இப்படி நடத்தலாமா?.. பெரும் சர்ச்சை

நேற்றைய போட்டியில் அனைத்து வடிவங்களிலும் 599 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னதாக ஷாகீர் கானின் சாதனையை முறியடித்துள்ளார் ரவி அஸ்வின்.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது போட்டி தற்போது பகலிரவு போட்டியாக அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாநது அணி 112 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

4வது இந்திய வீரர்

4வது இந்திய வீரர்

நேற்றைய போட்டியில் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும் ரவி அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். ஓலி போப்பை 28வது ஓவரில் வீழ்த்திய ரவி அஸ்வின் சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 4வது இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.

சாதனை முறியடிப்பு

சாதனை முறியடிப்பு

இதன்மூலம் 599 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷாகிர் கானின் முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (953), ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் (707) மற்றும் கபில் தேவ் (687) ஆகிய இந்திய வீரர்கள் முதல் 3 இடங்களில் உள்ள நிலையில் தற்போது 4வது வீரராக ரவி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

400 விக்கெட்டுகள் சாதனை

400 விக்கெட்டுகள் சாதனை

மேலும் டெஸ்ட் போட்டிகளில் 400 ரன்கள் சாதனையை எட்ட அவருக்கு இன்னும் 3 விக்கெட்டுகளே பாக்கி உள்ளது. இந்த 3 விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிங்சில் எட்டும் நிலையில் அந்த சாதனையையும் ரவி அஸ்வின் இந்த தொடரிலேயே முடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, February 25, 2021, 12:52 [IST]
Other articles published on Feb 25, 2021
English summary
The spinner now has 599 wickets across formats
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X