For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த அடி போதுமா கண்ணா.. குற்றம் சாட்டியவர்கள் என்ன பதில் வைத்துள்ளார்கள்...சுனில் கவாஸ்கர் பளார்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அதிரடி ஆட்டம் மூலம் அஸ்வின், விமர்சகர்களின் வாயை அடைத்துவிட்டதாக சுனில் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.

2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயித்து அசத்தியுள்ளது இந்திய அணி. இதில் சிறப்பாக அஸ்வின் சதம் ( 106 ) அடித்து அனைவரையும் வியக்க செய்தார்.

இந்நிலையில் அஸ்வினின் ஆட்டம் சென்னை மைதானம் குறித்து குற்றம்சாட்டியவர்களின் வாயை அடைத்துள்ளதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் அசத்தல்

அஸ்வின் அசத்தல்

இந்திய அணியில் கோலியை தவிர மற்ற வீரர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறிய நிலையில் லோ ஆர்டரில் களமிறங்கி அசத்தல் சதமடித்தார். குறிப்பாக இங்கிலாந்து ஸ்பின்னர்ஸுக்கு எதிராக அவர் ஆடிய விதம் அனைவரையும் வியக்கவைத்தது.

பவுலிங்

பவுலிங்

முன்னதாக முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் ரன்குவிப்புக்கு அஸ்வின் மிகப்பெரும் சவாலாக இருந்தார். மொத்தம் 23.4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 43 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

சென்னை பிட்ச் மிகவும் மோசமான ஒன்று எனவும் இதில் வெற்றி பெற்றால் ஆச்சரியம் இல்லை எனவும், இங்கிலாந்து அணி வீரர்களும் முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், மார்க் வாக் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர்.

பதிலடி

பதிலடி

இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், அஸ்வினின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. பிட்ச் சரியில்லை என குற்றம்சாட்டியவர்களுக்கு அஸ்வினின் சதம் பதிலளித்துள்ளது. குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவரின் ஆட்டம் நம்பிக்கை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

கேள்வி

கேள்வி

சிலர் இந்திய கிரிக்கெட்டை பற்றி புகார் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுத்தே வந்துள்ளோம். சென்னை பிட்ச் மோசம் என்றால், எப்படி முதல் டெஸ்டில் இங்கிலாந்து அடித்ததை விட 2வது டெஸ்டில் இந்தியா அதிக ஸ்கோர் அடித்திருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Story first published: Tuesday, February 16, 2021, 10:34 [IST]
Other articles published on Feb 16, 2021
English summary
Sunil Gavaskar has explained how Ashwin's Century has certainly silenced all the ‘perennial’ critics of Indian cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X