For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது ஒரு விபத்து தான்... ஒரு அதிர்ஷ்டத்தால் தான் எல்லாமே... வியக்கவைக்கும் அஸ்வின் வாழ்க்கை அனுபவம்

அகமதாபாத்: இங்கிலாந்து தொடரில் அசத்தி வரும் அஸ்வின், தான் கிரிக்கெட்டில் நுழைந்தது குறித்து தெரிவித்துள்ள கதை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அஸ்வினின் சுழலில் சிக்கி விழிபிதுங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தனது ஆட்டம் குறித்து பயிற்சியாளர் ஸ்ரீதரிடம் பேசிய அஸ்வின், தான் கிரிக்கெட் வீரர் ஆனதே ஒரு விபத்து தான் என தெரிவித்துள்ளார்.

அஸ்வின் சாதனை

அஸ்வின் சாதனை

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் நடந்து முடிந்தது. இதில் உலகில் அதிவேகமாக 400 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 77 போட்டிகளில் அஸ்வின் ஆடி 2ம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் உள்ளார். அவர் 72 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விபத்து

விபத்து

இந்நிலையில் பயிற்சியாளர் ஸ்ரீதரிடன் உரையாடல் நடத்திய அஸ்வின், எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும், கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்பது என் கனவு. ஆனால் நான் கிரிக்கெட் வீரர் ஆனது ஒரு விபத்து. எனது கனவில் நான் வாழ்ந்த்து வருகிறேன் என தெரிவித்தார்.

பயிற்சி

பயிற்சி

கொரோனா லாக்டவுன் நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை புரியவைத்துள்ளது. ஐபிஎல்-க்கு பிறகு எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கிடைத்தது. இதனால் நான் எவ்வளவு ஆசிப்பெற்றவன் என்பதை உணர்கிறேன். என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தோனி போன்றெல்லம் இல்லை

தோனி போன்றெல்லம் இல்லை

தோனியை போன்று நிறைய வெற்றிகளை பெற்று தந்து ஸ்டம்ப்களை எடுப்பவர் என்ற 'a run for his money' என்ற பட்டம் கொடுத்தால் எப்படி இருக்கும் என அஸ்வினிடம் கேட்கப்பட்டது. அதற்கு தோனி என்னைவிட நிறைய சாதனைகளை செய்துள்ளார். என்னுடைய ஆரம்ப காலக்கட்டத்தில் நீண்ட நாட்கள் சரியாக ஆடவில்லை. நான் ஸ்டம்ப்களை எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் என தெரிவித்துள்ளார்.

அஸ்வின் ஆட்டம்

அஸ்வின் ஆட்டம்

சர்வதேச அளவில் இதுவரை 77 டெஸ்ட், 111 ஒரு நாள், 46 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்வின் மொத்தமாக 603 விக்கெட்களை எடுத்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களை எடுத்து 59 ரன்களை விட்டுக்கொடுத்ததே அவரின் சிறந்த பந்துவீச்சாகும்.

Story first published: Saturday, February 27, 2021, 17:10 [IST]
Other articles published on Feb 27, 2021
English summary
R ashwin Shares his experience about how he became a Cricketer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X