For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உனக்கு 10 வருசம் தரேன். இதை மட்டும் செய்துவிடு.. சுப்மன் கில்லுக்கு கோலி தந்த டாஸ்க்.. "கிங்"யா நீ

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்பதற்கு முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஒரு நெகழ்ச்சியான சம்பவத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.

விராட் கோலி திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் தான் அவர் மற்றவர்களை விட ஒரு படி மேல் இருக்கிறார்.

பேட்டிங் மட்டுமல்ல அணிக்கு தேவையான ஒவ்வொரு விஷயத்திலும் விராட் கோலி கடும் கவனத்துடன் பயிற்சி செய்வார்.இதனை தனது புத்தகத்தில் முன்னாள் பில்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு

முக்கியமான ஆட்டம்

முக்கியமான ஆட்டம்

அதில் நாங்கள் மார்ச் மாதம் 2021 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இருந்தோம். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இது பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. நாங்கள் அப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம்.

காத்திருந்த சவால்

காத்திருந்த சவால்

பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படும் என்பதால் மைதானத்தில் காவிநிற இருக்கைகள் அமைக்கப்பட்டதால் பந்தை எங்களால் காண முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. காரணம் அப்போது கொரோனா நேரம் என்பதால் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் காவிநிற இருக்கைகள் மட்டும்தான் நாங்கள் கேட்ச் பிடிக்கும்போது தெரியுமே, தவிர பின் நிற பந்தை கண்டுபிடிக்க முடியாது என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

 200 கேட்ச்

200 கேட்ச்

உடனே விராட் கோலி என்னை தனியாக அழைத்துக் கொண்டு கேட்ச் பிடிப்பதற்காக பயிற்சியை மேற்கொண்டார். விராட் கோலி அவரால் கட்டுப்படுத்த முடியாததை விட்டுவிடுவார். எனினும் எதிர்பார்க்காமல் நடைபெறும் சம்பவத்திற்கு எப்போதும் கோலி தயாராக இருப்பார். இதனால்தான் அன்று பில்டிங் பயிற்சி நடைபெற்றது. காவி நிற சார்கள் முன் நான் பிங்க் பந்தை தூக்கி அடித்தேன். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் விராட் கோலி கிட்டத்தட்ட 200 கேட்ச் ஆவது அந்த பயிற்சியில் பிடித்திருப்பார்.

10 வயசு தருகிறேன்

10 வயசு தருகிறேன்

விராட் கோலியின் இந்த தீவிரப் பயிற்சியை பார்த்து அசந்து போன சுப்மன்கில் தாமும் இந்த பயிற்சியில் பங்கேற்பதாக கூறி களத்திற்கு வந்தார். உடனே விராட் கோலி அவரை வரவேற்று உன்னால் முடிந்த அளவுக்கு நீ கேட்சை பிடித்து விடு என்னோட வயசில் பத்தை உனக்குத் தருகிறேன் என்று கூறினார். இருவரும் சேர்ந்து கேட்ச் பயிற்சி ஈடுபட்டனர். இரண்டு பேரும் பயிற்சியை முடிப்பது போல் எனக்கு தெரியவில்லை.

மேலாளர் அழைத்தார்

மேலாளர் அழைத்தார்

இதனை அடுத்து அணியின் மேலாளர் வந்து பயிற்சி முடிந்து மிக நேரம் ஆகிவிட்டதாகவும், அணியினர் தங்களது ஹோட்டலுக்கு செல்ல தயாராக இருப்பதால் பேருந்து இன்னும் பத்து நிமிடங்களில் புறப்பட்டு விடும் என்று கூறிய பிறகு தான் இருவரும் தங்களுடைய பயிற்சியை முடித்துக் கொண்டு வந்தனர் என்று ஸ்ரீதர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார். இதனால் தான் விராட் கோலி இன்னும் நம்பர் 1 ஆக இருக்கிறார்

Story first published: Friday, February 3, 2023, 11:39 [IST]
Other articles published on Feb 3, 2023
English summary
R Sridhar reveals that how kohli and shubman gill puts hardwork behing every match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X