For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஹானே கோபப்பட மாட்டாரு... விராட்டோட எனர்ஜி கோபமா புரிஞ்சுக்கப்பட்டிருக்கு.. பரத் அருண் பளீர்!

டெல்லி : கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவிற்கு இடையிலான வேற்றுமைகள் குறித்து இந்திய பௌலிங் கோச் பரத் அருண் வெளிப்படுத்தியுள்ளார்.

அஜிங்க்யா ரஹானே பொறுமையானவர் என்றும் பௌலர்கள் சரியாக பந்து வீசவில்லை என்றாலும் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்த மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 சின்னதா தான் பேசியிருக்கேன்... பெரிய அளவுல மாற்றம்... பிளாக்வுட் பரபர பேட்டி! சின்னதா தான் பேசியிருக்கேன்... பெரிய அளவுல மாற்றம்... பிளாக்வுட் பரபர பேட்டி!

இதனிடையே இரண்டு பந்துகளை சரியாக போடவில்லை என்றாலும் விராட் தனது கோபத்தை வெளிப்படுத்துவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேற்றுமை வெளிப்படுத்திய கோச்

வேற்றுமை வெளிப்படுத்திய கோச்

சமீபத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெற்றி கொண்ட அந்த தொடரின் தற்காலிக கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இடையிலான வேற்றுமை குறித்து இந்திய பௌலிங் கோச் பரத் அருண் வெளிப்படையாக கூறியுள்ளார்.

கோபத்தை வெளிப்படுத்தாத ரஹானே

கோபத்தை வெளிப்படுத்தாத ரஹானே

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரின் கேப்டனாக செயல்பட்ட ரஹானே, அணியை பொறுமையாக வழிநடத்தினார். இந்நிலையில் ரவி அஸ்வினின் யூடியூப் சேனில் பேசிய பரத் அருண், பௌலர்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என்றாலும் தனது கோபத்தை ரஹானே வெளிப்படுத்த மாட்டார் என்று பரத் அருண் கூறியுள்ளார்.

உடனடியாக கோபப்படும் கோலி

உடனடியாக கோபப்படும் கோலி

விராட் கோலி இரண்டு பந்துகளை தவறாக போட்டாலும் உடனடியாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தி விடுவார் என்றும் அவரது எனர்ஜி சமயத்தில் கோபமாக அனைவராலும் புரிந்து கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். இதனிடையே ஆஸ்திரேலிய தொடரில் தங்களை உணர்ந்து செயல்பட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

சிறப்பாக செயல்படுவது சவால்

சிறப்பாக செயல்படுவது சவால்

நெருக்கடி நேரங்களில் சிறப்பாக செயல்படுவது என்பது மிகப்பெரிய சவால் என்றும் அதை இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார். அந்த சவாலை தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பாக அவர்கள் கருதி செயல்பட்டதாகவும் பரத் அருண் தெரிவித்தார்.

Story first published: Thursday, January 28, 2021, 18:45 [IST]
Other articles published on Jan 28, 2021
English summary
"To perform under pressure is the challenge, our players saw that challenge as an opportunity -Bharat Arun
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X