For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வந்தான்.. நின்னான்.. அவுட்டாறான்,, ரிப்பீட்டு..!! ரஹானேவுக்கு விரைவில் செக்..!!

கான்பூர்; நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்த தொடரில் மூத்த வீரர்கள் பலரும் ஓய்வால் பங்கேற்காத நிலையில், ரஹானேவுக்கு பொறுப்பு கூடுலாத இருந்தது. இதனை உணர்ந்த ரஹானே பேட்டிங்கில் முதலில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்

3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!

இந்தப் போட்டியில் எப்படியாவது பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற வெறி ரஹானேவின் பேட்டிங்கில் தெரிந்தது. இந்த இன்னிங்சில் ரஹானே புவுண்டரிகளாக விளாசினார்.

தவறான முடிவு

தவறான முடிவு

நியூசிலாந்து வீரர் ஜேமிசன் ஆட்டத்தில் வீசிய 49 புள்ளி 1வது ஓவரில் லெக் சைடில் ஆட முற்பட்ட போது,அவரது பேட்டில் பந்து பட்டு, விக்கெட்டு கீப்பரிடம் கேட்ச் ஆனதாக நியூசிலாந்து வீரர்கள் நடுவரிடம் முறையிட, நடுவரும் அவுட் அளித்தார். ஆனால் இதனை சற்றும் எதிர்பார்க்காத ரஹானே ரிவியூ கேட்க, மூன்றாம் நடுவரின் மறுஆய்வில் அது அவுட் இல்லை என தெரியவந்தது.

ஆட்டமிழப்பு

ஆட்டமிழப்பு

நடுவரின் தவறால் ரஹானேவின் கவனம் சற்று சிதறியது. இதனால் அடுத்த பந்தில் அவர் ஷாட் ஆட முற்பட்ட போது பந்து பேட்டில் எட்ஜ் ஆகி ஸ்டம்பில் பட்டது. இதனால் ரஹானே 63 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்களை எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். இதனால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்துடன் ரஹானே பெவிலியன் திரும்பினார்.

தொடரும் சோகம்

தொடரும் சோகம்

2021ஆம் ஆண்டு ரஹானேவுக்கு சோகமான ஆண்டாகவே அமைந்துள்ளது. கடைசி 20 இன்னிங்சில் அவர் வெறும் 407 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் வெறும் 2 அரைசதங்களே அடங்கும். இந்த ஆண்டில் ரஹானே அடித்த கோர்கள் 22,4,37,24,1,0,67,10,7,27,49,15,5,1,61,18,10,14,0,35.. இந்திய டெஸ்ட் அணியில் தூணாக விளங்கும் ரஹானே பெரிய ஸ்கோர் அடிக்காததால் அவருக்கு செக் வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

டெஸ்ட் அணியை அபாரமாக வழி நடத்தும் ரஹானே பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டால், அவரது இடத்திற்கு எவ்வித பாதிப்பும் வராது. தற்போது அறிமுக போட்டியில் ஸ்ரேயாஸ் அரைசதம் அடிக்க, கோலியும் அடுத்த போட்டியில் அணிக்கு திரும்புவதால் ரஹானேவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் பார்முக்கு திரும்பிய சிக்னல்களை ரஹானே காட்டியுள்ளார். இந்தப் போட்டியின் 2வது இன்னிங்சே ரஹானேவுக்கு கடைசி வாய்ப்பாக அமைந்துள்ளது.

Story first published: Thursday, November 25, 2021, 18:52 [IST]
Other articles published on Nov 25, 2021
English summary
Rahane fails to convert a start in to big score vs NZ. At last 20 innings, Rahane scored fifties only 2 times.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X