என்னுடைய நோக்கமே இதுதான் பாஸ்.. உண்மையை உடைத்த "தற்காலிக கேப்டன்".. ரஹானே vs கோலி பின்னணி!

சிட்னி: இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ரஹானே தனது கேப்டன்சி பதவி குறித்து பேட்டி அளித்துள்ளார்.

கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவிற்கு வந்துள்ளது. பல திருப்பங்கள், சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா கைப்பற்றியுள்ளது.

குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக தவறான பேச்சு.. சர்ச்சையில் இந்திய வீரர் அஸ்வின்..போலீசில் புகார்!

இந்திய அணியின் வெற்றிக்கு ரஹானேவின் கேப்டன்சி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணிவென்று சாதனை படைத்துள்ளது.

கேப்டன்சி

கேப்டன்சி

ரஹானேவின் சிறப்பான கேப்டன்சி மூலம் இந்திய அணி இந்த தொடரை வென்றது . 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வாஷ் அவுட் ஆகும் என்று பலரும் கணித்து இருந்தனர். இந்த நிலையில் கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி இந்திய அணி தொடரை வென்று கோப்பையை தக்க வைத்துள்ளது.

யார் இனி கேப்டன்

யார் இனி கேப்டன்

இந்த தொடர் வெற்றி காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக ரஹானேவை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது. ரஹானே சிறப்பாக கேப்டன்சி செய்கிறார். இவரை அணியின் நிரந்தர கேப்டனாக நியமிப்பது, இந்திய அணியின் எதிர்காலத்திற்கு சிறப்பானதாக இருக்கும்.

எதிர்காலம்

எதிர்காலம்

அதோடு ரஹானே கேப்டனானால், கோலியின் டென்ஷன் குறையும். இதனால் கோலி இன்னும் எளிதாக பேட்டிங் செய்ய முடியும். இந்திய அணிக்கு இது பெரிய வகையில் பலன் அளிக்கும் என்று சிலர் கூறியுள்ளனர்.

என்ன சொன்னார்கள்

என்ன சொன்னார்கள்

பிசிசிஐ அதிகாரிகள் சிலரும் கூட இந்த விஷயத்தை குறிப்பிட்டு உள்ளனர். இதனால் இந்திய அணிக்குள் ரஹானே vs கோலி என்ற பிம்பம் ஏற்கனவே உருவாகிவிட்டது. ஆனால் ரஹானே தனக்கு சண்டையே வேண்டாம் என்று பின்வாங்கி உள்ளார். அதன்படி, எனக்கு கேப்டன்சியில் விருப்பம் இல்லை.

விருப்பம் இல்லை

விருப்பம் இல்லை

கோலி செய்ததை இந்திய அணிக்காக நானும் செய்தேன். என்னுடைய ஒரே நோக்கம் இது மட்டுமே. கேப்டன் பதவி எல்லாம் என்னுடைய நோக்கமே கிடையாது, என்று ரஹானே மிகவும் பெருந்தன்மையாக குறிப்பிட்டுள்ளார்.

 கோலி செய்ததை செய்தேன்

கோலி செய்ததை செய்தேன்

கோலி செய்ததை இந்திய அணிக்காக நான்கும் செய்தேன். என்னுடைய ஒரே நோக்கம் இது மட்டுமே. கேப்டன் பதவி எல்லாம் என்னுடைய நோக்கமே கிடையாது, என்று ரஹானே மிகவும் பெருந்தன்மையாக குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rahane not so keen to get the test team captaincy for India after the Border Gavaskar Trophy victory.
Story first published: Monday, January 25, 2021, 10:26 [IST]
Other articles published on Jan 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X