அந்த கேக்கை என்னால் வெட்ட முடியாது.. குடும்பத்திடமே சொன்ன ரஹானே.. இவர்தான் ரியல் ஜெண்டில்மேன்!

மும்பை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்ற நிலையில் இந்திய திரும்பிய ரஹானேவிற்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்தியா ஆஸ்திரேலியா மோதிய மிக நீண்ட டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக முடிந்துள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது.

இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இந்திய அணியை வழி நடத்திய ரஹானே பாராட்டப்பட்டு வருகிறார் .

வரவேற்பு

வரவேற்பு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்ற நிலையில் இந்திய திரும்பிய ரஹானேவிற்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மும்பையில் இருக்கும் தன்னுடைய சொந்த வீட்டிக்கு ரஹானே சென்றார். அங்கு ரஹானேவை வரவேற்க மக்கள் திரண்டு இருந்தனர்.

கட் அவுட்

கட் அவுட்

ரஹானேவின் சாதனைகளை பட்டியலிட்டு பெரிய அளவில் கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் ரஹானேவை வரவேற்க அவரின் நபர்கள், சில கிரிக்கெட் கிளப் உறுப்பினர்கள் அவரின் வீட்டில் இருந்தனர். ரஹானே வெட்டுவதற்காக சிறப்பு கேக் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முடியாது

இந்த கேக் ரஹானேவிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதில் ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரு இடம்பெற்று இருந்தது. இது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அடையாளப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

கேக் வெட்டவில்லை

கேக் வெட்டவில்லை

இந்த கேக்கை பார்த்த ரஹானே, அதை வெட்ட மறுத்துவிட்டார். பிறர் மனதை புண்படுத்தும் வகையில் இது இருக்கு, அதனால் அந்த கேக்கை வெட்ட முடியாது என்று குடும்பத்திடம் கூறிய ரஹானே, கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். ரஹானேவின் இந்த குணம், பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. இவர்தான் ரியல் ஜென்டில்மேன் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
After Australia series win, Rahane refused to cut the cake with Kangaroo on top of it.
Story first published: Friday, January 22, 2021, 13:22 [IST]
Other articles published on Jan 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X