இந்தியா நம்பர் 1 கிரிக்கெட் டீமா இருக்குன்னா அதுக்கு இவரும் ஒரு காரணம்! #HappyBirthdayDravid

Rahul Dravid 47th Birthday| இந்தியா நம்பர் 1 கிரிக்கெட் டீமா இருக்க இவரும் ஒரு காரணம்!

சென்னை : கிரிக்கெட்டின் தடுப்புச் சுவர் டிராவிட் இன்று தன் 47வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும் தினமும் இந்திய கிரிக்கெட்டுக்காக அயராது உழைத்து வருகிறார் டிராவிட்.

இன்று இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பல இளம் வீரர்களின் வளர்ச்சியில் அவருடைய பங்கு மிக அதிகம். இந்தியா இன்று நம்பர் 1 அணியாக பார்க்கப்படுகிறது என்றால் அதில் டிராவிட்டின் பங்கு மிக மிக அதிகம்.

புகழ்பெற்ற டிராவிட்

புகழ்பெற்ற டிராவிட்

தனது 16 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கையில் டிராவிட் மிகப் பெரிய பெயரையும், புகழையும் பெற்றார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் ஆடிய அதே காலத்தில் அவர்களை தாண்டி தன் பெயரை பதித்தார்.

அமைதியானவர்

அமைதியானவர்

டெஸ்ட் போட்டியில் நிதானம் வாய்ந்த பேட்ஸ்மேனாக விளங்கிய டிராவிட், களத்துக்கு வெளியேயும் அதே நிதானத்துடன் தான் இருந்தார். என்ன நடந்தாலும் பொறுமை மற்றும் அமைதியை கடைபிடித்து வந்தார் டிராவிட்.

பணிவு

பணிவு

24,000 சர்வதேச ரன்களையும், 48 சதங்களையும் அடித்துள்ள டிராவிட், என்றுமே தான் பெரிதாக சாதித்ததாக ஒப்புக் கொண்டதில்லை. எந்தப் போட்டியில் அவரது ஆட்டத்தை புகழ்ந்து பேசினாலும், உடனே அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய மற்ற வீரர்களை சுட்டிக் காட்டுவார். அது அவரது பணிவுக்கு ஒரு சிறந்த உதாரணம்.

சச்சின் மீது மரியாதை

சச்சின் மீது மரியாதை

"நான் 10,000 ரன்களுக்கு மேல் அடித்தது என் குழந்தைகளுக்கு நினைவில் இல்லாவிட்டாலும், நான் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடியதை அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்" என ராகுல் டிராவிட் ஒருமுறை கூறி எல்லோரையும் வியக்க வைத்தார்.

பயிற்சியாளர் ஆனார்

பயிற்சியாளர் ஆனார்

டிராவிட் தன் ஓய்வுக்குப் பின், கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து இந்தியா ஏ அணி மற்றும் இந்தியா அண்டர் 19 அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தொடர்ந்து பணியாற்றி இருக்கிறார். பல இளம் வீர்களுக்கு வழிகாட்டியாக விளங்கி இருக்கிறார்.

இந்திய அணி பயிற்சியாளர் பதவி

இந்திய அணி பயிற்சியாளர் பதவி

டிராவிட் எளிதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்து இருக்கலாம். அதற்கு பதிலாக, அடுத்த தலைமுறை இந்திய கிரிக்கெட்டை வடிவமைக்கவே அவர் விரும்பினார். அதனால் இந்திய அணி பல வழிகளில் லாபம் அடைந்துள்ளது.

இளம் வீரர்கள் படை

இளம் வீரர்கள் படை

டிராவிட்டிடம் பயிற்சி பெற்ற மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, ஹனுமா விஹாரி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் உலகக் கோப்பை அணியிலும், ஷுப்மன் கில் ஒருநாள் அணியிலும் பங்கேற்று உள்ளனர்.

ஐபிஎல் அணிக்கும் நன்மை

ஐபிஎல் அணிக்கும் நன்மை

ஐபிஎல் அணியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் ஆலோசகராகவும் இருந்த போது, உன்முக் சந்த், கருண் நாயர், ஹர்மீத் சிங் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களை அடையாளம் கண்டார் டிராவிட்.

துவக்க வீரர் ராகுல்

துவக்க வீரர் ராகுல்

தற்போது இந்திய அணியில் கலக்கலாக ஆடி வரும் துவக்க வீரர் கேஎல் ராகுல், இடையில் டிவியில் அளித்த பேட்டி சர்ச்சையில் சிக்கி, பார்ம் இழந்து தவித்து வந்த நேரத்தில் டிராவிட் ஆலோசனைகளால் மீண்டு வந்தார். அதன் பின் அவர் ஆட்டம் பல மடங்கு முன்னேறியது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தற்போது டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமயின் தலைவராக பதவி வகித்து இளம் வீரர்களை பட்டை தீட்டி வருகிறார். இப்படி டிராவிட் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய போதும், ஓய்வு பெற்ற பின்னும் இந்திய அணிக்கு நன்மை மட்டுமே செய்து வருகிறார். பிறந்த நாள் வாழ்த்துக்கள் டிராவிட்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rahul Dravid 47th Birthday - He still giving a lot to Indian cricket
Story first published: Saturday, January 11, 2020, 14:38 [IST]
Other articles published on Jan 11, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X