For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரிசையாக 3 ஃபோர் வெளுத்துவிட்டு.. கூப்பிட்டு அட்வைஸ் செய்த இந்திய ஜாம்பவான்.. டினோ பெஸ்ட் நெகிழ்ச்சி

மும்பை : ராகுல் டிராவிட் இளம் வீரர்களுக்கு உதவுவது போல வேறு எந்த ஜாம்பவானும் உதவி செய்ததில்லை என்றே கூறலாம்.

இந்திய அணிக்கே பயிற்சியாளர் ஆக வாய்ப்பு கிடைத்தும் இளம் வீரர்களுக்கு உதவும் வகையில் இந்தியா ஏ, அண்டர் 19 அணிகளுக்கு பயிற்சி அளிக்க சென்றார்.

டிராவிட் கிரிக்கெட் ஆடிய போதே வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவரை கூப்பிட்டு அறிவுரை கூறி உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

டிரம்ப் திறந்து வைத்த ஸ்டேடியத்தில் இந்திய அணி? காரணம் இதுதான்.. பிசிசிஐயில் இருந்து கசிந்த தகவல்!டிரம்ப் திறந்து வைத்த ஸ்டேடியத்தில் இந்திய அணி? காரணம் இதுதான்.. பிசிசிஐயில் இருந்து கசிந்த தகவல்!

டினோ பெஸ்ட்

டினோ பெஸ்ட்

டினோ பெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்துவீச்சாளர் ஆவார். மிகக் குறைந்த போட்டிகளிலேயே ஆடி இருந்தாலும் தன் ஓய்வுக்குப் பின் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதற்கு காரணம் சமூக வலைதளங்கள் தான்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

பல கிரிக்கெட் வீரர்களை கடும் விமர்சனம் செய்து விரைவில் பிரபலம் ஆனார் டினோ பெஸ்ட். பல சமயம் அவரது கருத்து நியாயமாக இருந்ததால் ரசிகர்களும் அதை சொல்ல ஆரம்பித்தனர். சமீபத்தில் கூட இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் டினோ பெஸ்ட்.

டிராவிட் 3 ஃபோர்

டிராவிட் 3 ஃபோர்

அவர் இந்திய அணிக்கு எதிர்கா முதன் முறையாக 2005இல் இந்தியன் ஆயில் கோப்பை தொடரில் பங்கேற்றார். அப்போது முதல் போட்டியில் ராகுல் டிராவிட் அவரது பந்துவீச்சை வெளுத்தார். டிராவிட் வரிசையாக மூன்று ஃபோர் அடித்து தெறிக்கவிட்டார்.

விடாமல் போராடு

விடாமல் போராடு

டினோ பெஸ்ட் மனம் தளர்ந்து போனார். அதைக் கவனித்த ராகுல் டிராவிட் போட்டி முடிந்த பின் டினோ பெஸ்ட்-இடம் பேசினார். "இளம் வீரரே! உன் ஆற்றலை நான் ரசிக்கிறேன். உன் பந்துவீச்சில் ஃபோர் அடிக்கிறார்கள் என்பதால் நிறுத்தி விடாதே. விடாமல் போராடு." என கூறி உற்சாகமூட்டி இருக்கிறார் டிராவிட்.

அன்பு

அன்பு

அதை சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட டினோ பெஸ்ட், அது மிகவும் மரியாதைக்குரியது, அவரது அன்பை வெளிப்படுத்தியது என்றார். மேலும், தான் இந்திய வீரர்களை அதிகம் விரும்புவதாகவும், யுவராஜ் சிங் ஒருமுறை தன் பேட்டை அளித்தார் எனவும் நினைவு கூர்ந்தார்.

நல்ல குணம்

நல்ல குணம்

என் அனுபவத்தில் இந்திய வீரர்கள் மிகவும் நல்ல குணம் கொண்டவர்கள். ராகுல் டிராவிட் மற்றும் பிற வீரர்கள் நல்லவர்கள், கனிவானவர்கள். 150 கோடி மக்கள் தங்களை ஆதரிக்கிறார்கள் என்பதை காட்டாமல் நடந்து கொள்வார்கள். இந்த விளையாட்டுக்கு மதிப்பு அளிப்பார்கள் என்றார் டினோ பெஸ்ட்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

டினோ பெஸ்ட் 25 டெஸ்ட் போட்டிகளில் 57 விக்கெட்கள், 25 ஒருநாள் போட்டிகளில் 34 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். 6 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். கடைசியாக 2014இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடி இருந்தார்.

Story first published: Sunday, July 19, 2020, 13:40 [IST]
Other articles published on Jul 19, 2020
English summary
Rahul Dravid advised Tino Best after 3 back to back fours in 2005 match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X