For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உள்ளூர் பயிற்சியாளர்களை பயன்படுத்தினா, ஐபிஎல்-இல் நல்லா விளையாடலாம் - ராகுல்

டெல்லி : ஐபிஎல் அணிகள் நமது இந்திய பயிற்சியாளர்களை பயன்படுத்தாததால், மேலும் சிறந்த விளையாட்டை பெறும் தந்திரத்தை இழப்பதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் உள்ள ராகுல் டிராவிட், ஐபிஎல்லில் நமது இந்திய கோச்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் அதிகமான இந்திய வீரர்கள் உள்ளது போலவே, நம்முடைய இந்திய கோச்களிலும் அதிக திறமை கொண்ட பலர் உள்ளனர் என்று கூறியுள்ள டிராவிட், அவர்களுக்கு நம்முடைய இந்திய வீரர்களின் திறமைகள் குறித்து நன்கு தெரியும் அதனால் அவர்கள் மேலும் சிறப்பான பயிற்சியை அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

 தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர்

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர்

இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனது ஆட்டத்தின்மூலம் பல்வேறு சிறப்பான தருணங்களை தந்தவர் ராகுல் டிராவிட். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் உள்ளார்.

 ராகுல் டிராவிட் கருத்து

ராகுல் டிராவிட் கருத்து

இந்தியாவின் திறமையான பயிற்சியாளர்களை ஐபிஎல் போட்டிகளில் பயன்படுத்துவதில்லை என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 ஐபிஎல் அணிகள் மேலும் பலன்பெறும்

ஐபிஎல் அணிகள் மேலும் பலன்பெறும்

இந்தியாவில் உள்ள பயிற்சியாளர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்பு கொடுப்பதன்மூலம், இந்திய அணிகள் மேலும் பலன்பெறும் என்றும் ராகுல் கூறியுள்ளார்.

 வாய்ப்புகள் கிடைப்பதில்லை

வாய்ப்புகள் கிடைப்பதில்லை

நமது இந்திய பயிற்சியாளர்கள் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட் அவர்களுக்கு தங்களது திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

 சிறந்த இந்திய பயிற்சியாளர்கள்

சிறந்த இந்திய பயிற்சியாளர்கள்

நமது இந்திய அணியில் சிறப்பான திறமைகளை கொண்ட வீரர்கள் பலர் இருப்பது போலவே, நமது இந்திய பயிற்சியாளர்களும் சிறந்த திறமைகளை கொண்டுள்ளதாகவும் டிராவிட் தெரிவித்துள்ளார்.

 வீரர்களை நன்கறிந்த பயிற்சியாளர்கள்

வீரர்களை நன்கறிந்த பயிற்சியாளர்கள்

நமது வீரர்களின் தனிப்பட்ட திறமைகள் குறித்து நமது இந்திய பயிற்சியாளர்கள் நன்கு அறிவார்கள் என்று தெரிவித்துள்ள ராகுல் டிராவிட், இதன்மூலம் அவர்கள் சிறப்பான பயிற்சியை நமது வீரர்களுக்கு அளிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 அதிக திறமைகள்

அதிக திறமைகள்

இந்தியாவில் உதவி பயிற்சியாளர்களும் அதிக திறன்களை கொண்டவர்களாக இருப்பதாக தெரிவித்த ராகுல் டிராவிட், அவர்களை பயன்படுத்துவதன்மூலம் மேலும் சிறப்பான ஆட்டங்களை நமது வீரர்கள் அளிக்க முடியும் என்ற ட்ரிக்கை நமது ஐபிஎல் அணிகள் தவறவிடுவதாகவும் குறிப்பிட்டார்.

Story first published: Friday, November 29, 2019, 12:33 [IST]
Other articles published on Nov 29, 2019
English summary
We have Good Indian coaches who not getting opportunities in IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X