For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இனியும் பொறுக்க முடியாது” ராகுல் டிராவிட் எடுத்த திடீர் நடவடிக்கை.. திகைத்துபோன சீனியர்கள்- வீடியோ

மும்பை: இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்காக ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் கொடுக்க களமிறங்கியுள்ளார் ராகுல் டிராவிட்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை ( டிச.3) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் யார் வெற்றியாளர் என்பதை போட்டியாக இது அமைந்திருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

“இந்திய அணியை மீட்டவரே இல்லையா”.. 2வது டெஸ்டில் வெளியேறும் முக்கிய வீரர்.. காரணம் என்ன? “இந்திய அணியை மீட்டவரே இல்லையா”.. 2வது டெஸ்டில் வெளியேறும் முக்கிய வீரர்.. காரணம் என்ன?

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்த போட்டிகான இந்திய அணியில் யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள் என்பதில் பெரும் சண்டையே நடந்து முடிந்துவிட்டது. சமீப காலமாக சொதப்பல்களில் மட்டுமே ஈடுபட்டு வரும் சீனியர் வீரர்கள் அஜிங்கியா ரகானே மற்றும் சட்டீஸ்வர் புஜாரா ஆகியோரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. கடந்த முதல் டெஸ்டில் கூட இருவரும் மோசமான முறையில் அவுட்டாகி வெளியேறினர்.

டிராவிட் வைத்த நம்பிக்கை

டிராவிட் வைத்த நம்பிக்கை

அனைவரும் விமர்சித்து வரும் போதும், இவர்களின் மீது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அதற்கு காரணம் அவர்களின் அனுபவம் தான். இதுகுறித்து பேசியிருந்த அவர், மிக கடினமான சூழல்களில் எல்லாம் இந்திய அணியை காப்பாற்றிய அனுபவம் அவர்களுக்கு உள்ளது. சிறந்த வீரருக்கு ஒரே ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும், அவர்களின் ஃபார்மை மீண்டும் கொண்டு வர என குறிப்பிட்டிருந்தார்.

டிராவிட் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்

டிராவிட் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்

அவரின் வார்த்தைகள் பொய்யாகிவிடக் கூடாது என்பதற்காக தற்போது நேரடியாக களத்தில் குதித்துள்ளார். மும்பையில் பெய்து வரும் மழையின் காரணமாக இந்திய அணியின் பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால் சீனியர் வீரர்களுக்காக முற்றிலும் மூடப்பட்ட வலைப்பயிற்சி முகாம் ஒன்றுக்கு டிராவிட் ஏற்பாடு செய்துள்ளார். அதில் ஒவ்வொரு பந்தையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும், எங்கு தவறு செய்கிறார்கள் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் தெளிவுப்படுத்தி வருகிறார்.

பெரும் எதிர்பார்ப்பு

ரகானே, புஜாராவுடன் இணைந்து விராட் கோலியும் டிராவிட்டின் மேற்பார்வையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஏனென்றால் விராட் கோலி நீண்ட நாட்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருக்கிறார். எனவே டிராவிட் தற்போது நேரடியாக களமிறங்கி கொடுத்துள்ள பயிற்சியின் பலனாக 2வது டெஸ்டில் அவர்கள் மூவருமே சிறப்பான ஆட்டத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Who is Rachin Ravindra? Kiwis Cricketer named after Rahul and Sachin | OneIndia Tamil
சூப்பர் வாய்ப்பு

சூப்பர் வாய்ப்பு

போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நல்ல மழை பொழிந்து வருகிறது. நாளைய தினமும் மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே இங்கு பேட்டிங்கிற்கு சாதகமான சூழலாக தான் அமைந்திருக்கும். வேகப்பந்துவீச்சாளர்களே சற்று சிரமப்பட்டு தான் வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சீனியர்கள் கம்பேக் கொடுக்க வேண்டும்.

Story first published: Friday, December 3, 2021, 10:06 [IST]
Other articles published on Dec 3, 2021
English summary
Rahul Dravid gives a special treatment to the Senior players, after their poor form
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X