For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'எங்க' ஃபார்முலா.. டிராவிட் 'யூஸ்' பண்ணிட்டார்.. நாங்க காலி - கிரேக் சாப்பல்

ஆஸ்திரேலியா: தனது அசாத்திய கிரிக்கெட் திறமையால், இந்தியாவில் வலிமையான இளம் வீரர்கள் கட்டமைப்பை ராகுல் டிராவிட் உருவாக்கிவிட்டார் என்று கிரேக் சாப்பல் கூறியுள்ளார்.

தொடர்ந்து 3 முறை இந்திய வீரர்கள் பெற்ற விருது ஒருவழியா அடுத்த நாட்டுக்கு விட்டுக் கொடுத்துருக்காங்கதொடர்ந்து 3 முறை இந்திய வீரர்கள் பெற்ற விருது ஒருவழியா அடுத்த நாட்டுக்கு விட்டுக் கொடுத்துருக்காங்க

கிரேக் சாப்பல் எனும் இந்த பெயர் இன்றைய 2k கிட்ஸுக்கு அவ்வளவு பரிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. கங்குலி தலைமையிலான இந்திய அணிக்கும், டிராவிட் தலைமையிலான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருந்தவர். கிரேக் சாப்பல் பயிற்சியின் கீழ் தான், இந்திய அணி தொடர்ச்சியாக 17 போட்டிகளில் சேஸிங்கில் வென்று சாதனைப் படைத்தது. அப்போது கேப்டனாக இருந்தவர் தான் டிராவிட்.

 தேடிக் கண்டுபிடித்து

தேடிக் கண்டுபிடித்து

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் டிராவிட். அதில், தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கினார் எனலாம். ஏனெனில், இன்று இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக வலம் வரும் பல வீரர்களை தேடிக் கண்டுபிடித்து செதுக்கியவர் ராகுல் டிராவிட்.

 உருவாக்கிய டிராவிட்

உருவாக்கிய டிராவிட்

இந்திய அணியின் 'எதிர்கால விக்கெட் கீப்பர்' , 'தோனிக்கு மாற்று' எனும் நம்பிக்கையை ஓரளக்காவது விதைத்திருக்கும் ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில், ரியான் பராக், ஷ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மாயங்க் அகர்வால், கம்லேஷ் நாகர்கோட்டி என்று இவர் விதைத்த விதைகள் ஏராளம்.

 நல்ல கட்டமைப்பு

நல்ல கட்டமைப்பு

அதுமட்டுமின்றி, இவரது பயிற்சியின் கீழ், 2016ல் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, 2018ல் கோப்பையைக் கைப்பற்றியது. ஆகையால், டிராவிட் போன்ற ஒரு மெகா பவர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில், தான் இந்தியாவில் தனது பயிற்சித் திறமையினால் ராகுல் திராவிட் வலுவான இளம் வீரர்கள் உடைய நல்ல கட்டமைப்பை உருவாக்கியுள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.

 இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

இதுகுறித்து அவர், "இளம் வீரர்களைத் திறமையான அளவில் உருவாக்கி இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. நல்ல அடித்தளம் இந்த இரு நாடுகளில் உருவாகியுள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட், ஆஸ்திரேலியர்களின் மூளையைப் பயன்படுத்தி இந்தியாவில் இளம் வீரர்களுக்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கிவிட்டார்.

 எதிர்பார்த்த பலன் இல்லை

எதிர்பார்த்த பலன் இல்லை

ஆஸ்திரேலியாவில் நாங்கள் எப்படி இளம் வீரர்களை உருவாக்கினோமோ, அதேபோன்று அதே பிராஸஸை கொண்டு, இந்தியாவில் இளம் வீரர்களை ராகுல் திராவிட் உருவாக்கி வருகிறார். வரலாற்று ரீதியாகவே இளம் வீரர்களை அதிகமாக உருவாக்கும் நாடு என்று பெயரெடுத்தோம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அந்தப் பெயர் மாறிவிட்டது. இளம் வீரர்கள் அதிகமான அளவில் வந்தாலும் அவர்களில் பலர் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக விளையாட முடியவில்லை.

 சீனியர் அணி

சீனியர் அணி

ஆஸ்திரேலியாவை விட, இந்திய அணி இன்னும் சிறப்பாக இளம் வீரர்களை உருவாக்குகிறது. பும்ரா, கோலி, ஜடேஜா, ஷமி என முக்கிய சீனியர் வீரர்கள் இல்லாமல், பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடிய இந்திய அணி 'ஏ' அணி என்ற பலரும் கூறினாலும், அதில் விளையாடிய இளம் வீரர்கள் செயல்பாடு அனுபவ வீரர்களைப் போல் இருந்தது'' என்றார் கிரெக் சாப்பல்.

Story first published: Thursday, May 13, 2021, 23:02 [IST]
Other articles published on May 13, 2021
English summary
Dravid picked 'Australian brains' Chappell - ராகுல் டிராவிட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X