For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய இளம் திறமைகளை சிறப்பாக மேம்படுத்தியிருக்காரு டிராவிட்... ரஹானே பாராட்டு

டெல்லி : கடந்த இந்தியா -ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இதில் இளம் வீரர்களின் பங்கு மிகப்பெரியதாக இருந்தது.

இந்நிலையில் இந்திய இளம் திறமைகளை மேம்படுத்துவதில் ராகுல் டிராவிட் மிகப்பெரிய பங்கு வகிப்பதாக அஜிங்க்யா ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து பறந்த போன் கால்.. கோலி சொன்ன வார்த்தையால் மாறிய பிளான்.. ப்பா செம பின்னணி! இந்தியாவிலிருந்து பறந்த போன் கால்.. கோலி சொன்ன வார்த்தையால் மாறிய பிளான்.. ப்பா செம பின்னணி!

மேலும் ஐபிஎல் தொடர்கள் இந்திய வீரர்களை பயமற்றவர்களாக மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வடிவங்களிலான தொடர்களில் இந்தியா 2 தொடர்களை கைப்பற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டு கடந்த 2018 -19 வெற்றி வரலாற்றை மீண்டும் கொண்டு வந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

சிறப்பான கவனம் பெற்ற வீரர்கள்

சிறப்பான கவனம் பெற்ற வீரர்கள்

இந்த டெஸ்ட் தொடரில் முக்கிய மற்றும் மூத்த வீரர்கள் காயம் காரணமாக விலகிய நிலையில், இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டு அவர்கள் சிறப்பான ஆட்டங்களை கொடுத்தனர். சில வீரர்கள் தங்களது அறிமுக ஆட்டத்தை இந்த போட்டியில் விளையாடி கவனம் பெற்றுள்ளனர்.

பயமற்றவர்களாக மாறிய வீரர்கள்

பயமற்றவர்களாக மாறிய வீரர்கள்

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் இளம் வீரர்களை பயமற்றவர்களாக மாற்றியுள்ளதாக கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் கேப்டனாக செயல்பட்டு இமாலய வெற்றியை சாத்தியமாக்கிய அஜிங்க்யா ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார். ஐபிஎல் மூலம் மூத்த வீரர்களுடன் தொடர்ந்து பயணிக்கும் இளம் வீரர்கள் தைரியமாக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் டிராவிட் சிறப்பு

ராகுல் டிராவிட் சிறப்பு

மேலும் இந்திய இளம் திறமைகளை மேம்படுத்துவதில் ராகுல் டிராவிட் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார். இதே பாராட்டுகளை பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், இது தேவையற்ற பாராட்டு என்று சில தினங்களுக்கு முன்பு டிராவிட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 26, 2021, 10:35 [IST]
Other articles published on Jan 26, 2021
English summary
IPL has made young Indian players fearless -Ajinkya Rahane
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X