For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கு டிராவிட் தந்த கவுரவம்.. இந்திய வீரர்களின் நெகிழ்ச்சி செயல்

மும்பை : ஐசிசி நடத்திய மகளிருக்கான முதல் அண்டர் 19 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இதில் செஃபாலி வெர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே தோல்வியை தழுவியது. மற்ற அனைத்து போட்டிகளிலும் வென்று அசத்தியது.

2022ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்.. சூர்யகுமார் யாதவ்க்கு கிடைத்த கவுரவம்.. விவரம் 2022ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்.. சூர்யகுமார் யாதவ்க்கு கிடைத்த கவுரவம்.. விவரம்

சாதனை

சாதனை

இதே போன்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்களில் சுருட்டி, இந்திய அணி 14 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை எட்டி, அண்டர் 19 டி20 உலக கோப்பையை வென்று அசத்தியது. சாதனை படைத்த இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ சார்பில் 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

இதன் மூலம் அண்டர் 19 பிரிவில் நடத்தப்படும், ஆடவருக்கான 50 ஓவர் உலகக்கோப்பையையும், மகளிருக்கான டி20 உலகக்கோப்பை என இரண்டிலும் இந்தியா தான் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதனிடையே மகளிர் இந்திய அணிக்கு சீனியர் ஆடவர் அணி நெகிழ்ச்சியான விசயம் ஒன்றை செய்துள்ளது.

டிராவிட் வாழ்த்து

டிராவிட் வாழ்த்து

அதன் படி, இந்திய வீரர்கள் ஒன்றிணைந்து இளம் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது, இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாள். அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணி கேப்டன் இங்கு இருக்கிறார். அவர் உங்களுக்கான செய்தியை கொடுப்பார் என்று பிரித்வி ஷாவிடம் வழங்கினார்.

பாராட்டு

பாராட்டு

இதனையத்து பேசிய பிரித்வி ஷா, இது மிகப் பெரிய சாதனை. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். Well done என்று கூற, ஒட்டுமொத்த இந்திய அணியும் உற்சாகமாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை எழுப்பினர். இதனிடையே, அண்டர் 19 உலக கோப்பையை வென்ற செஃபாலி வெர்மா பேசுகையில், இது வெறும் ஆரம்பம் தான் என்று தெரிவித்துள்ளார். அடுத்ததாக சீனியர் அணிக்காக உலக கோப்பையை வெல்வதே தமது லட்சியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, January 30, 2023, 13:31 [IST]
Other articles published on Jan 30, 2023
English summary
Rahul dravid heartfelt gesture to u19 india womens team champions
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X