For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிராவிட்டுக்கும் சிஎஸ்கேவுக்கும் கனெக்ஷன் இருக்கு.. பிசிசிஐ நோட்டீஸ்.. கொந்தளிக்கும் வீரர்கள்!

Recommended Video

BCCI Notice to Dravid | டிராவிட்டுக்கு பிசிசிஐ நோட்டீஸ்..கொந்தளிக்கும் வீரர்கள்!- வீடியோ

மும்பை : முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு கடந்த சில நாட்கள் முன்பு நோட்டீஸ் அனுப்பியது பிசிசிஐ.

பிசிசிஐயில் ஒருவர் ஒரு பதவியில் தான் இருக்க வேண்டும் என்ற விதியை வைத்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராகுல் டிராவிட் - ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே இருக்கும் ஒரு தூரத்து தொடர்பை சுட்டிக் காட்டி வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது பிசிசிஐ. ஆனால், முன்னாள் வீரர்கள் பலரும் இதைக் கண்டு கொந்தளித்துப் போய் உள்ளனர்.

இது ரொம்ப மோசம்.. ஒண்ணு மேட்ச் முழுசா நடக்கணும்.. இல்ல நடக்காம போகணும்.. வெறுத்துப் போன கோலி! இது ரொம்ப மோசம்.. ஒண்ணு மேட்ச் முழுசா நடக்கணும்.. இல்ல நடக்காம போகணும்.. வெறுத்துப் போன கோலி!

என்ன பதவி?

என்ன பதவி?

ராகுல் டிராவிட் சமீபத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த பணிக்கு அவரை நியமிக்கும் முன் டிராவிட் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடக் கூடாது என கூறப்பட்டது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பதவியில் இருந்த டிராவிட் அந்த பதவியில் இருந்து சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொண்டு, இந்த பதவியைப் பெற்றார்.

சிஎஸ்கே தொடர்பு எப்படி?

சிஎஸ்கே தொடர்பு எப்படி?

இந்த நிலையில், விடுப்பு எடுத்துக் கொள்வது எல்லா செல்லாது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் உரிமையாளர் என்பதால், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பதவியில் இருந்து கொண்டு தேசிய கிரிக்கெட் அகாடெமி பதவியிலும் டிராவிட் இருப்பது சரியா? எனக் கேட்டு புகார் எழுந்தது.

நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ

நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ

இதை அடுத்து விளக்கம் கேட்டு டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது பிசிசிஐ. ஆனால், இதே பிசிசிஐ தான் டிராவிட்டுக்கு பதவி கொடுத்தது. அப்போது சம்பளம் இல்லாத விடுப்பு மட்டும் எடுத்துக் கொண்டால் போதும் எனக் கூறிய பிசிசிஐ, தற்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த குழப்பத்துக்கு காரணம், பிசிசிஐயில் நிலவும் நிர்வாக சிக்கல்கள் தான் எனக் கூறப்படுகிறது.

கங்குலி கொதிப்பு

கங்குலி கொதிப்பு

முன்னாள் கேப்டன் கங்குலியும் இதே போன்ற சிக்கலில் இருக்கிறார். அவர் ஒரே நேரத்தில் மேற்கு வங்காள கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியிலும், ஐபிஎல் அணியின் ஆலோசகர் பதவியிலும் இருக்கிறார். அவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டிராவிட் விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் கங்குலி. நோட்டீஸ் அனுப்புவது ஒரு பேஷனாக மாறி விட்டது என கொதித்து இருக்கிறார்.

ஹர்பஜன் சிங் விளாசல்

ஹர்பஜன் சிங் விளாசல்

ஹர்பஜன் சிங் கூறுகையில், இது போல நோட்டீஸ் அனுப்புவது டிராவிட் போன்ற ஜாம்பவான்களை அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறது என விளாசி இருக்கிறார். முன்னாள் வீரர்கள் பலரும் இதே மனநிலையில் தான் உள்ளனர்.

இது சரியா?

இது சரியா?

பிசிசிஐ வட்டத்தில் இது பற்றி கூறும் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி விதிகள் மாற்றப்பட்டுள்ளதால் தான் இந்த விவகாரங்கள் எழுந்துள்ளன. எல்லாம் விதிப்படி தான் நடக்கிறது என கூறினர்.

Story first published: Friday, August 9, 2019, 12:01 [IST]
Other articles published on Aug 9, 2019
English summary
Rahul Dravid issued notice over conflict of interest by BCCI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X