For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவ்ளோ தான் வெற்றி வாய்ப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் பலம்.. டிராவிட் கணிப்பு!

பெங்களூரு: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா எப்படி செயல்படும் என டெஸ்ட் கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் கணித்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு பின்னர் கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் பக்கம் திரும்பியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக இந்திய அணி வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 24 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் அறிவித்தது பிசிசிஐ.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22ம் தேதி வரை நடக்கவுள்ளது. இது முடிந்தவுடன் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இந்த தொடரானது ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கணிப்பு

கணிப்பு

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் டிராவிட், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக உள்ளது என நினைக்கிறேன். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்றதால் வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். சில வீரர்களுக்கு ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உள்ளது. பேட்டிங்கில் இந்த முறை அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே எனது கணிப்புபடி இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றலாம்.

பலம்

பலம்

இங்கிலாந்து அணியும் சாதாரணமானது அல்ல. அவர்கள் பந்து வீச்சில் பலம் வாய்ந்தது. அவர்களின் வேகப்பந்து வீச்சு தாக்குதல் அற்புதமாக இருக்கும். அவர்களிடம் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை பார்த்தால் அதில் உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக ஜோ ரூட் உள்ளார். அதே போல் பென் ஸ்டோக்ஸும் ஆல்ரவுண்டராக சிறந்த ஃபார்மில் உள்ளார். எனினும் அவரை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் உள்ளார்.

2 ஸ்பின்னர்ஸ்

2 ஸ்பின்னர்ஸ்

இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின் என இரண்டு ஸ்பின்னர்களும் சேர்க்கப்படலாம். ஏனென்றால் ஹர்திக் பாண்டியா இல்லை. எனவே அவர்கள் இருவரும் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் உதவலாம். இங்கிலாந்தில் கோடைக்காலமாக உள்ளது. பிட்ச்னாது வரண்டு காணப்பட்டால், பந்தானது நன்கு டேர்னாகும்.

Story first published: Monday, May 10, 2021, 11:25 [IST]
Other articles published on May 10, 2021
English summary
Rahul Dravid Prediction on India's winning chance against England Test Series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X