For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அப்படி எல்லாம் செய்ய முடியாது” தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடர்.. ராகுல் டிராவிட் பளீர் பேச்சு!!

டெல்லி: தென்னாப்பிரிக்க தொடர் குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் முக்கிய அப்டேட்களை கொடுத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது.

Recommended Video

India vs South Africa T20 Series குறித்து Rahul Dravid முக்கிய தகவல் *Cricket

இரு அணிகளும் மோதும் இந்த தொடர் வரும் ஜூன் 9ம் தேதி தொடங்கி ஜூன் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சாவு பயத்த காமிச்சிட்டாங்க பரமா..!! திகிலை ஏற்படுத்திய அஸ்வின் விமான பயணம்.. என்ன நடந்தது?சாவு பயத்த காமிச்சிட்டாங்க பரமா..!! திகிலை ஏற்படுத்திய அஸ்வின் விமான பயணம்.. என்ன நடந்தது?

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

இதற்காக கே.எல்.ராகுல் தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட பலருக்கும் ஓய்வு தரப்பட்டுள்ளதால், இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கும், எப்படி தென்னாப்பிரிக்காவை சமாளிக்கும் என்ற குழப்பம் இருந்து வந்தது.

ராகுல் டிராவிட் விளக்கம்

ராகுல் டிராவிட் விளக்கம்

இந்நிலையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ரோகித் சர்மா இந்திய அணியின் 3 வடிவ வீரர். எனவே அனைத்து வீரர்களும், அனைத்து நேரங்களும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. அவர்கள் புத்துணர்ச்சியுடனும், உடற்தகுதியுடனும் இருக்க வேண்டியது அவசியம். எனவே அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் ஓய்வு தருவோம் எனத்தெரிவித்தார்.

அணியின் திட்டம்

அணியின் திட்டம்

கே.எல்.ராகுலின் கேப்டன்சி குறித்து பேசிய அவர், நாங்கள் சிறப்பான தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். அணியின் டாப் 3 வீரர்கள் பற்றி நன்கு அறிவோம். அதிக ஸ்கோர் போட்டிகளில் டாப் 3 வீரர்கள் ஸ்ட்ரைக் ரேட்டை சரியாக வைத்திருந்து, கடைசி வரை ஆட வேண்டும். மற்ற போட்டிகளிலும் ஓரளவிற்கு அணிக்கு உதவக்கூடிய வீரர்களையும் டாப் 3 இடங்களில் வைத்துள்ளோம் எனக்கூறினார்.

பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

பவுலிங் குறித்து பேசிய ராகுல் டிராவிட், உம்ரான் மாலிக் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார். ஆனால் அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் ஆட்டம் நடைபெறும் நேரத்தில் அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த அழுத்தத்தை ஏற்று, களத்தில் செயல்பட வேண்டும் என டிராவிட் கூறியுள்ளார். இதன் மூலம் உம்ரான் மாலிக் ப்ளேயிங் 11ல் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ப்ளேயிங் 11 குறித்து அவர் எந்தவித தகவலையும் கொடுக்கவில்லை.

Story first published: Tuesday, June 7, 2022, 18:44 [IST]
Other articles published on Jun 7, 2022
English summary
Rahul dravid Press meet ahead of India vs south africa t20 series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X