For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நல்லா ஸ்கோர் பண்ணனுமா? அப்படினா பேட் பண்றத நிறுத்து - டிராவிட்டின் 'ஷாக்' அட்வைஸ்

மும்பை: ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ரன்கள் குவிக்க, ராகுல் டிராவிட் தனக்கு அளித்த சீக்ரெட் டிப்ஸ் குறித்து ரஹானே மனம் திறந்துள்ளார்.

சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-1 என்று கைப்பற்றி வரலாறு படைத்தது. விராட் கோலி தலைமையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு, ரஹானே தலைமையில் 2வது போட்டியில் வெற்றி, 3வது போட்டியில் முரட்டு டிரா, கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி என்று ஆஸி., மண்ணில் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி.

இந்நிலையில், தொடருக்கு கிளம்பும் முன்னர், பேட்டிங் குறித்து ராகுல் டிராவிட் அளித்த ஆலோசனைகள் குறித்து ரஹானே, வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடான கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

 நெட் பயிற்சியை குறைத்துவிடு

நெட் பயிற்சியை குறைத்துவிடு

"தொடருக்காக நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவதற்கு முன்னர் என்னை அழைத்த ராகுல் டிராவிட், அதிகமாக பிரஷரை எடுத்துக் கொள்ளாதே. முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு நீ தான் அணியை வழிநடத்தப் போகிறாய் என்று எனக்கு தெரியும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம். மனரீதியாக வலிமையாக இரு. அதிகம் வலைப்பயிற்சியில் ஈடுபடாதே.

 நீயும் அந்த தவறை செய்யாதே

நீயும் அந்த தவறை செய்யாதே

நான் அதிகம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டேன். நானும் அந்த தவறை செய்திருக்கிறேன். உன்னுடைய பேட்டிங் தயாரிப்பு நன்றாகவே உள்ளது. அதுவே போதும். நீ நன்றாகவே பேட்டிங் செய்கிறாய்

 கேப்டன்சி பற்றி யோசி

கேப்டன்சி பற்றி யோசி

எந்த பிரஷரையும் எடுத்துக் கொள்ளாமல், அணியை எப்படி வழிநடத்தப் போகிறாய் என்பதை மட்டும் யோசி. சக வீரர்கள் மத்தியில் எப்படி நம்பிக்கையை விதைக்கப் போகிறாய் என்று யோசி. முடிவைப் பற்றி கவலைப்படாதே.

 ஒர்க் அவுட்டான டிப்ஸ்

ஒர்க் அவுட்டான டிப்ஸ்

உண்மையில் ராகுல் டிராவிட் உடனான எனது இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனக்கு அந்த டிப்ஸ் சௌகரியமாக இருந்தது. வலைப் பயிற்சியில் அதிகம் ஈடுபடாதது ஒரு கேப்டனாக எனக்கு பிரஷரைக் குறைத்தது" என்றார்.

Story first published: Wednesday, February 3, 2021, 9:11 [IST]
Other articles published on Feb 3, 2021
English summary
Dravid's shocking batting tips to Rahane - Here the secret
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X