For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலைவலி புடிச்ச வேலைங்க.. நினைச்சது ஏதும் நடக்கல.. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வேதனை.. என்ன நடந்தது?

பெங்களூரு: ராகுல் டிராவிட் முதல் முறையாக தனது சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக களமிறங்கினார்.

அதுவும் இந்தியாவும், தென்னாப்பிரிக்கா அணிகளும் தலா 2 போட்டிகளை வென்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நடந்தது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் பெங்களூருவில் மழை பெய்து வருகிறது.

5வது முறையும் ரிஷப் பண்ட்க்கு லக் இல்ல.. தென்னாப்பிரிக்காவில் 3 மாற்றங்கள்.. தொடரும் ஏமாற்றம்5வது முறையும் ரிஷப் பண்ட்க்கு லக் இல்ல.. தென்னாப்பிரிக்காவில் 3 மாற்றங்கள்.. தொடரும் ஏமாற்றம்

சவாலான பயணம்

சவாலான பயணம்

இந்த நிலையில், ஆட்டம் 19 ஓவர்களாக இரண்டு அணிகளுக்கும் குறைக்கப்பட்டுள்ளது. அப்போது விரர்கள் அறையின் வெளியே நின்று கொண்டிருந்த டிராவிட்டிடம் ஸ்டார் நிறுவனம் பேட்டி எடுத்தது. அப்போது பயிற்சியாளர் பொறுப்பு எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு டிராவிட், சவால்கள் நிறைந்த பயணமாக இது இருக்கிறது.

6 கேப்டன்கள்

6 கேப்டன்கள்

கடைசி 8 மாதத்தில் மட்டும் 6 கேப்டன்களுடன் பணியாற்றி விட்டேன். இது என் பிளான் படியே நடக்கவில்லை. கொரோனா மற்றும் பயோ பபுளின் தாக்கம் தான் இதுக்கு காரணம். தொடர்ந்து அதிக போட்டிகளில் விளையாடுகிறோம். இதனால் வீரர்களின் பனிச்சுமையை குறைக்க தான் இப்படி பல கேப்டன்கள் மாற்றப்பட்டனர். இதன் மூலம் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு இந்த இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது.

ஏமாற்றமான தொடர்

ஏமாற்றமான தொடர்

ஒவ்வொரு போட்டியிலும் கொஞ்சம் முன்னேற்றம் அடைகிறோம், நன்றாக விளையாடுகிறோம். எனது பயிற்சியாளர் பயணத்தை திரும்பி பார்த்தால் தென்னாப்பிரிக்க பயணம் மட்டும் ஏமாற்றமாக அமைந்தது. அது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு பாதிப்பை தந்தது. ஆனால் ஓயிட் பால் கிரிக்கெட்டில் நன்றாகவே விளையாடுகிறோம்.

டிராவிட் பாராட்டு

டிராவிட் பாராட்டு

இந்த தொடரிலும் கூட முக்கிய வீரர்கள் இல்லாமல் இளைஞர்கள் நன்றாக விளையாடுகின்றனர். ஐபிஎல் மூலம் நமக்கு நிறைய திறமையான வீரர்கள் கிடைத்துள்ளனர். இதனால் நமக்கு பல வேறு ஆப்சன்கள் பிளேயிங் லெவனுக்கு கிடைத்துள்ளது. அதுவும் இளம் வீரர்கள் சிலர் பந்து வீசும் வேகம் எல்லாம் பிரமிப்பாக உள்ளது என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

Story first published: Sunday, June 19, 2022, 21:06 [IST]
Other articles published on Jun 19, 2022
English summary
Rahul dravid speech on his coaching challenges and experience சவால்கள் நிறைந்த பயணமாக பயிற்சியாளர் பொறுப்பு இருக்கிறது என ராகுல் டிராவிட் கருத்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X